பலவண்ணப் பூக்களின் வாசம்.. குழந்தைகள்!
Nov 14, 2026,10:47 AM IST
- கா.சா. ஷர்மிளா
சின்னஞ்சிறிய பூக்கள் நீங்கள்..
பலவண்ண பூக்களின் வாசமே நீங்கள்..
நெஞ்சை அள்ளும் சுவாசமே நீங்கள்...
ஜாதி மத பேதமில்லா நெஞ்சமே நீங்கள்...
சிறகை விரிக்கும் பறவைகளே நீங்கள்...
புதுமை உலகின் சிங்கங்களே நீங்கள்...
காகித ராக்கேட் செய்யும் குறும்புகளே நீங்கள்...
வருங்கால இந்தியாவின் ஏவுகணை நாயகர்களே நீங்கள்...
அன்பைப் பொழியும் செல்வங்களே நீங்கள்...
வருங்கால சமுதாயத்தின் சிற்பிகளே நீங்கள்....
வல்லரசு இந்தியாவை உருவாக்கும் நெஞ்சங்களே நீங்கள்...
எதிர்கால இந்தியாவின் வலிமைமிக்க தூண்களாக....
தங்களின் அறிவால் வீட்டையும் நாட்டையும் உயர்த்துங்கள்.. என்று
இந்நன்னாளில் அனைத்து அன்பு செல்வங்களையும் வாழ்த்துவோம்
(கா.சா.ஷர்மிளா, ஆசிரியர், புவனகிரி, கடலூர் மாவட்டம். வீரத்தமிழரசி வேலுநாச்சியார் இலக்கிய சமூக இயக்கம்- புதுவை, கடலூர் மாவட்ட பொறுப்பாளர்)