தீப ஒளியில்.. வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்!
Nov 08, 2026,11:49 AM IST
- கா.சா.ஷர்மிளா, புவனகிரி
அச்சம் என்ற இருளை அகற்ற
அகல் விளக்கில் தீபம் ஏற்ற..
அறியாமை என்ற இருளை அகற்ற..
அழகூட்டும் வான வேடிக்கை வானில் காட்ட..
சங்கு சக்கரத்தின் வண்ணங்களைப் போல்..
எங்கும் அமைதியும் சந்தோஷமும் நிலவ...
எங்கும் மகிழ்ச்சி ஒளி ஒளிரட்டும்..
தீப ஒளி என்றாலே வேற்றுமையில் ஒற்றுமை என்பதே..
தீபாவளி திருநாளில்
நிறைந்த செல்வமும் குறைவில்லா நலனும் பெற்று..
தீப ஒளி திருநாளில்...
என் தீப திருநாள் நல்வாழ்த்துக்கள்
(கா.சா.ஷர்மிளா, ஆசிரியர், புவனகிரி, கடலூர் மாவட்டம். வீரத்தமிழரசி வேலுநாச்சியார் இலக்கிய சமூக இயக்கம்- புதுவை, கடலூர் மாவட்ட பொறுப்பாளர்)