ஆனந்த அன்பு என்றும் கொண்டிடவே.. ஆனந்த தீபம் இன்று ஏற்றிடுவோமே!

Su.tha Arivalagan
Nov 24, 2026,12:17 PM IST

- கவிஞர் கா.சா.ஷர்மிளா


திரு அண்ணாமலையின் அடி முடி காணாத தீபமே... 

அனைத்துயிர்களும் இறைவனுக்கு சமமென்று விளக்குமே....


திருவண்ணாமலையின் மகா ஜோதியே...

அகிலத்தின் இருள் நீக்கும் ஒளியே ...


காரிருள் சூழ்ந்த அறியாமை இருளை அகற்றுமே...

கார்த்திகை மாத தீபத் திருநாளே...




பிரபஞ்சத்தில் அக்னியை வணங்கும் இந்நன்னாளிலே...

நம் மனதின் இருளை நீக்கும் இவ் ஒளி மூலமே...


நம் வாழ்வின் இருளைப் போக்கும் மெய் ஞானமே.. 

பேராசை பொறாமை அறியாமையை அகற்றுமே....


கார்த்திகை மாதத்தின் தீப வாசமே...

எல்லோர் மனதிலும் வீசுமே அன்பின் சுவாசமே....


மங்காது ஒளிரும் தீப திருநாளிலே...

மகிழ்ச்சி பொங்கட்டும் அனைவரின் இல்லத்திலே...


துன்பங்கள் விலக நோய்நொடி அகல...

நன்மைகள்சூழ புது அகல் விளக்கை ஏற்றிடுவோமே...


ஆனந்த அன்பு என்றும் கொண்டிடவே..

ஆனந்த தீபம் இன்று ஏற்றிடுவோமே...!


எண்ணெயை இழந்து ஒளிர்கின்ற தீபத்தை போல...

தன்னலம் பாராமல் உழைத்து ஒளிர்கின்ற...


அனைவருக்கும் என் இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்!


(கா.சா.ஷர்மிளா, ஆசிரியர், புவனகிரி, கடலூர் மாவட்டம்.  வீரத்தமிழரசி வேலுநாச்சியார் இலக்கிய சமூக இயக்கம்- புதுவை, கடலூர் மாவட்ட பொறுப்பாளர்)