வடலூர் வள்ளலார்.. நமது வரலாறே நமது அடையாளம்!

Su.tha Arivalagan
Oct 12, 2026,04:48 PM IST

- கா.சா. ஷர்மிளா


வடலூரின் நாயகனே ஜோதி வடிவானவரே... 

ராமையா சின்னமையாரின் ஐந்தாம் புத்திரரே..


கல்வி கற்க பள்ளி செல்லாதவரே... 

கந்தனை வணங்க

கந்தக்கோட்டம் சென்றவரே...


தெய்வ மணிமாலை பாடிய தெய்வசிகாமணியே...

சமராச வேத சன்மார்க்க சங்கம் அமைத்தவரே...


ஆறு அந்தங்களுக்கு பொதுவான நெறியை உருவாக்கியவரே.. 

திருவருட்பாவை வழங்கிய திருவருட்பிரகாச வள்ளலே...




ஒளி வடிவமான கடவுள் ஒருவரே...

புலால் உண்ணா உயிர் பலி வேண்டா 


சாதி சமய வேறுபாடு கூடா...

ஆன்மநேய ஒருமைப்பாட்டு உணர்வு வேண்டும்  என்றவரே....


எவ்வுயிரும் தன்னுயிர் போல் நினைக்க வேண்டும்...

ஜீவகாருண்யமே பேரின்ப வீடு என்றவரே...


வயிற்றுப் பிணியை  தீர்த்த வள்ளலே...

சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமசாலை அமைத்தவரே...


மேட்டுக்குப்பம் சித்திவளாகத்தில் 

இறைவனுடன் கலந்தவரே.. 


(கா.சா.ஷர்மிளா, ஆசிரியர், புவனகிரி, கடலூர் மாவட்டம்.  வீரத்தமிழரசி வேலுநாச்சியார் இலக்கிய சமூக இயக்கம்- புதுவை, கடலூர் மாவட்ட பொறுப்பாளர்)