குன்றெல்லாம் குமரன்!

Su.tha Arivalagan
Jan 29, 2026,04:52 PM IST

- சிவ.ஆ. மலர்விழி ராஜா


குன்றுகள் தோறும் குமரனின் வாசம்.....


குழந்தை வேலனே 

குமரா வருக......


கார்த்திகை வாசா

கஜமுகன் நேசா.......




கார்த்திகேயனே

கந்தா வருக..... வருக....!


செந்தூரில் அருளிடும்

செந்தில் நாதா......


செந்தமிழ் குமரா

முருகா வருக....!


ஈசனின் மகனே 

ஈஸ்வரி மைந்தா....


திருவடி பணிந்தோம்

திருமுருகா வருக......!


கார்த்திகை பெண்களின் கரங்களில் தவழும்....


கருணை கடலே   வருக....வருக.....!


பழநி கிரியின்

மேல்தனில் நின்று......


பக்தருக்கருளும்

பாலனே வருக......!


சுவாமி மலையில் 

குருவாய் வந்து....


மந்திரம் அருளிய

சுவாமியே வருக.....!


பழமுதிர் சோலையில்

நாவல் பழம் தந்து


அவ்வையின் அன்பில் 

கனிந்த வேலா..... வருக.....!


திருப்பரங்குன்றம் 

திருமணக்கோலம்.....


காட்சி தந்து ஆட்சி 

செய்யும் அழகா வருக....!


தணிகை மலையில்

வள்ளியை மணந்து


வேலும் மயிலும்  துணையென்று

அருளிய....


சுந்தரவேலா வருக......!

வருக.....!


முருகா....வருக.....!

முருகா.....வருக.....!


கந்தா.....வருக......!

வருக.... வருக....!


கருணை கடலே 

வருக..... வருக.....!


(சீர்காழியைச் சேர்ந்த சிவ.ஆ.மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)