ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

Meenakshi
Oct 25, 2025,04:20 PM IST

கர்னூல்: ஆந்திராவில் 20 பேர் பலியான வால்வோ பேருந்து விபத்தில், பெங்களூரு பிலிப்கார்ட் குடோனுக்கு கொண்டு செல்லப்பட்ட 234 ஸ்மார்ட்போன்களின் பேட்டரி வெடிப்பே பேருந்தில் பெரும் தீ விபத்துக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.


ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில், சின்னடிக்கூரு கிராமத்தில் நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில், ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 21 பேர் உயிரிழந்தனர். இந்த பேருந்து ஹைதராபாத்தில் இருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் தீப்பிடித்துள்ளது. அந்த தீ மளமளவென பரவியதில் பேருந்து முழுவதும் எரிந்து எலும்பு கூடாக மாறியது.




இந்த பேருந்தில் மொத்தம் 46 பேர் பயணித்துள்ளனர். அவர்களில் 21 பேர் தீப்பிடித்ததும் ஜன்னல்கள் வலியாக குதித்து சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிகாலையில் விபத்து நடித்துள்ளதால் பல பயணிகள் உறக்கத்தில் இருந்துள்ளனர். இந்த விபத்தில் பலியானவர்களில், 6 பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்றும், 6 பேர் தெலங்கானாவை சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. மேலும் சிலரை அடையாளம் காணும் பணியும் நடந்து வருகிறது.


இந்த நிலையில், விபத்திற்கான முக்கிய காரணம் வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது. விபத்தில் சிக்கிய வால்வோ பேருந்தில், பெங்களூரு பிலிப்கார்ட் குடோனுக்கு கொண்டு செல்லப்பட்ட 234 ஸ்மார்ட்போன்களின் பேட்டரி வெடிப்பே பேருந்தில் பெரும் தீ விபத்துக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.