வேற்றுமையில் ஒற்றுமை
- லால்குடி வெ. நாராயணன்
பகலும் இரவும்
வேறுதான்
காலச் சக்கரம் சுழலும் போது
வேற்றுமையில் ஒற்றுமை!
கடலும் கரையும்
வேறுதான்
அலைகள் தழுவி நிற்கும் போது
வேற்றுமையில் ஒற்றுமை!
மலரும் முள்ளும்
வேறுதான்
ஒரே கிளையில் பூக்கும் போது
வேற்றுமையில் ஒற்றுமை!
மண்ணும் விண்ணும்
வேறுதான்
தொடுவானம் ஒன்றிணையும் போது
வேற்றுமையில் ஒற்றுமை!
கண்ணும் இமையும்
வேறுதான்
இமைக்க மறக்காமல் இருக்கும் போது
வேற்றுமையில் ஒற்றுமை!
யாழும் இசையும்
வேறுதான்
நாதம் இழையோடும் போது
வேற்றுமையில் ஒற்றுமை!
நீயும் நானும்
வேறுதான்
அன்பு பாலம் அமைக்கும் போது
வேற்றுமையில் ஒற்றுமை!
(எழுத்தாளர் லால்குடி வெ நாராயணன், சென்னை மாம்பாக்கத்தில் வசித்து வருகிறார். பூர்வீகம் ஸ்ரீரங்கம். பிறந்தது லால்குடி. ஆயிரக்கணக்கில் ஜோக்ஸ் பிரசுரமாகியுள்ளது. ஜோக்ஸ், கதைகள், கவிதைகள் என பலவித பத்திரிகைகளில் நிறைய எழுதியுள்ளார். பாரத ஸ்டேட் வங்கியில் 37 வருடம் 4 மாதம் பணி செய்து நிறைவான மனதுடன் மேனேஜராக ஓய்வுபெற்றவர். பத்திரிக்கைகளில் வெளியான ஜோக்குகளை புத்தகமாக எழுதிய அவரது புத்தகத்தை நடிகர் எஸ்.வி.சேகர் வெளியிட்டார்)