பாக்கியராஜ் என்றும் ஒரு சகாப்தம்!
- கவிதாயினி டாக்டர் எஸ்.மணிமேகலை
பாக்கியராஜ் எனும் ஒரு திரைக்காவியமே ...
பார்த்தோர் நெஞ்சில் எல்லாம் நீ திரைச்சித்திரமே
கதை ஆசிரியராய் காலடி சுவடு பதித்தாய் ...
கதை இயக்குனராய் காவியமும் படைத்தாய்
வெள்ளாங் கோவில் தந்த வெண்ணிலவே ..
வெள்ளேந்தி நடிப்பில் நீ ஒரு வெண்பூவே ...
கன்னிப் பருவத்திலே வில்லனாய் முகம் பதித்தாய் ...
உதிரிப் பூக்களின் வண்ணத்தில் ஊமையும் ஆனாய் ..
தாவணி கனவு நாயகிகளின் அண்ணனுமானாய்
ஒரு ஊரின் ராஜகுமாரியின் கண்ணனுமானாய் ...
எளிமையான உன் நடன அழகை ரசிக்காதவர் யார் ..
எல்லோருக்கும் பிடித்தமான உன் நடிப்பை பார்க்காதவர் யார் ....
சிரிப்பென்றாலும் சிந்தனை என்றாலும் உன் நடிப்பில் தனி முத்திரை
சீர்தூக்கிப் பார்த்து நாங்கள் தருவோம் உன் நடிப்புக்கு முத்திரை ..
யார் மனமும் புண்பட்டு போகாத பேச்சாளனும் நீ
யாவரும் விரும்பும் நடு நாயகனும் நீ
குடும்பத் திரைப்படங்களே தந்து கோலோச்சினாய் ..
குற்றமில்லா சமூகக் கருத்துக்களை மனத்தில் வித்திட்டாய் ...
உன் குரு உன்னை விட்டு மறைந்தது வயோதிகத்தினால்
உனக்கென்ன அவசரம் உடன் புறப்பட்டாய் வருத்தத்தினால் ....
திரை கலைஞர்களும் ரசிகர்களும் தவித்து நிற்க ...
சிறப்பான உன் குடும்பமோ கண்ணீர் வடிக்க ...
புன்னகை வதனத்துடன் புறப்பட்டு விட்டாய் நீயும் ..
பூப்போல திரும்ப குழந்தையாய் வந்திடுவாய் நீயும்