திரைத்துறையின் பாக்கியமே.. கலைத்துறையின் அதிசயமே!

Su.tha Arivalagan
Jun 28, 2026,10:04 AM IST

- புலவர் ப.ஈஸ்வரநாதன், சென்னை


திரைத்துறையின் பாக்கியமே...!

கலைத்துறையின் அதிசயமே...!


இளையோரும் முதியோரும் கொண்டாடிய

யதார்த்த நாயகனே...!


நடிப்பினில் நவரசமாய்...

வசனத்தில் பரவசமாய்...

இயக்கத்தின் இமயமே...!


நவரசப் பதிவுகளை அள்ளித்தரும்

‘பாக்யா’ வின் ஆசிரியரே...!




குடும்ப வசனத்திலும் மழைச்சாரலே...

இன்று...

தூரலும் நின்னு போச்சே...!


எல்லோர் மனதிலும்

இன்றும் வலம்வரும்

ராசுக்குட்டியே...!


ஜாதிமத பேதமில்லா...

‘இது நம்ம ஆளே’...!


பார்ப்பவரையும் பரவசப்படுத்தியே

விழிகளால் பேசிய

‘மௌன கீதமே’...!


மண்ணைவிட்டு மறைந்தாலும்...

விண்ணையும் ஆளச்

சென்று வா...!


மறுபிறவியிலும்

மனிதனாகவே வந்துவிடு...!


காத்திருக்கிறோம்

கண்ணீரோடு...!