RIP Director K Baghyaraj: திரைவானத் தூறல் தீர்ந்து போச்சு!
- எம்.கே.திருப்பதி, திருப்பூர்
வெள்ளாங்கோயில்
வெள்ளாவியே
உடைந்தது என்
உள்ளாவியே
இனிஎன் சினிமா
சுவரில்லா சித்திரமா?
தூறல் தொலைத்த
கீறல் வானமா?
முந்தானை முடிச்சே - உனை
முடிக்க
முந்திக்கொண்டானா மறலி?
புதிய வார்ப்பே - நீ
புதைந்து போனாயா!
மௌன கீதமே - நீ
மௌனி ஆனாயா?
தமிழ் மூக்கே
நீ குத்திய
மூக்குத்திப் பூ
வாடிப்போனதா?
அந்த
ஓலப்பாளையம்
பள்ளியும்
ஓட்டு வீடும்
உனக்காக அழுகிறதே!
கோபியின்
வயல் வெளியும்
வாழைதோட்டமும்
வதங்கிப்போனதே!
நான்
சிவப்பு மனிதனின்
சீக்ரெட் ஏஜெண்டே
இறைக்கதை கொலோச்சிய
இடத்தில்
திரைக்கதை தந்த
திரையுலக லெஜெண்டே
சாமானியச் சமூகத்தின்
தரித்திரம் பேசிய
சரித்திரமே
குடும்ப சிக்கலை
குழிசிப் பொங்கலாய்
குழைத்துக் கொடுத்த
திரைத் திறமே
ஆசான் போனானென
அவசரப் பட்டாயா?
இல்லை
அந்தகன் அழைக்க
ஆவி விட்டாயா?
வெள்ளைமனம்
உள்ளமச்சான்
கொள்ளை போனானே
அந்திவரும் முன்னே
முந்திப் போனானே!
திருப்பிய புறமெல்லாம்
தெரிகிறாய் நீயே
திரைக்கதை மன்னா
இனி
உணவு உண்ணுமா - என்
உண்ணா?
(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி. 98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன்)