Tamil Poem: தேற்றிட யாருளர்?
- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
தென்னகம் பிறந்த
தெய்வமும் இன்று
விண்ணகம் சென்றதுவே!
தேவதை போல்
எமைக் காத்தவர் உயிரினைக்
காலனும் கொய்தனனே!
அன்னையைப் போல் ஒரு
இன்முகம் காட்டிய
மன்னவன் மறைந்தனரே!
கண்களும் இன்று
குளம் என ஆகிக்
குருதியும் வழிகிறதே!
நேர்மையின் தீபம்
நல்லதொரு மனிதர்
இன்றைக்கு மறைந்தாரே!
தேற்றிட யாருளர்?
வாட்டிடும் சோதனை
வாய்மொழி மறந்ததுவே!
காட்டிய அன்பும்
கடமையின் மாண்பும்
கடவுளைச் சேர்ந்ததுவே!
பூட்டிய விழித்திரை
பூமியில் ஆறென
நீரினைச் சுரக்கிறதே!
இதற்குள் அவர் உயிர்
இறைவனும் பறித்தெமை
வாட்டிட விரும்பியதேன்?
இரு விழி ஆறென
நீரினைச் சுரந்து
கடல் மட்டம் உயர்வதும் ஏன்?
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்).