ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பாடம்!
Jan 09, 2026,01:31 PM IST
- சி. குமரேஸ்வரி
மாணவ மணிகளே
முத்திரை பதிக்கப் போகும் சித்திரங்களே
புன்னகையுடன் பாடம் படிக்க வாருங்கள்
உங்கள் சிரிப்பே பள்ளியின் அழகு,
உங்கள் முயற்சியே நாளைய வெற்றி.
ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பாடம்,
ஒவ்வொரு முயற்சியும் ஒரு முன்னேற்றம்.
தவறுகளும் கற்றலின் ஒரு பகுதிதான்,
நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள்.
புத்தகங்களில் மட்டும் அல்ல,
வாழ்க்கையிலும் பாடங்கள் உண்டு.
கேள்விகள் கேளுங்கள், பயப்படாதீர்கள்,
அங்கேயே அறிவு மலர்கிறது.
நல்ல மனிதராக வளர்வதே
கற்றலின் உயர்ந்த இலக்கு.
அன்பும் உழைப்பும் உடன் கொண்டு,
உங்கள் பாதையை அழகாய் ஆக்குங்கள்
முட்பாதையும் அழகாகும்
புத்தகப் பை சுமக்கும் உங்களால்!
(குமரேஸ்வரி சி, பட்டதாரி ஆசிரியர், வி கே அரசு மேல்நிலைப்பள்ளி, அய்யன்காளிபாளையம், திருப்பூர்)