Sir/Mam.. joke.. kadi joke.. சங்கடப்படாம சிரிச்சுட்டுப் போங்க.. மழை டென்ஷன் குறையும்!
- அகிலா
சென்னை: எங்க பார்த்தாலும் ஜோன்னு மழை.. அப்படின்னு வடிவேலு புலம்புற மாதிரி மக்களும் புலம்பிட்டு இருக்காங்க. மழை தேவைதான்.. ஆனால் வெளியில் போக முடியாம, வேலை வெட்டியைப் பார்க்க முடியாம இப்படியே பெஞ்சுக்கிட்டு இருந்தா எப்படிங்க.. அப்படின்னு அலுக்க வைக்கிற அளவுக்கு இந்த மழை அலும்பு பண்ணிட்டு இருக்கு.
சரி சரி மழையால் டென்ஷனாக வேண்டாம். அதைக் குறைக்க ரெண்டு வடையைக் கடிப்போம்.. கூடவே கடி ஜோக்ஸையும் படிப்போம்.
ராஜா: இந்தப் பாட்ட போட்டு ஆட முடியாது.
ராணி: அது எந்தப் பாட்டு
ராஜா: நிப்பாட்டு!!
கமலா: கடல் தண்ணி ஏன் உப்பா இருக்கு?
விமலா: இனிப்பா இருந்தா ஈ மொய்க்கும் இல்ல!
கோபு: ரகு டிபன் சாப்பிடும்போது காது பொத்தி கிட்டே சாப்பிட்டான் ஏன்? அப்படி என்ன டிபன் அது ?
ராமு: அதுவா.. இடியாப்பம்!
மூர்த்தி: ஒரு நாய் நடுரோட்டில் நின்னு ஓன்னு கத்துச்சாம்?. ஏன்?
கீர்த்தி: ஏன்னா அது ஓநாய்.
ரவி: அவனுக்கு இன்டர்வியு என்றாலே ஏன் பிடிக்காதாம்
சந்திரன்: நாலு பேர் கேள்வி கேக்குறா போல நடந்துக்காதேன்னு அவங்க அப்பா சொல்லி வளர்த்திருக்காராம்!
என்னங்க டென்ஷன் குறைஞ்சிருச்சா.. குறைஞ்சா சந்தோஷம்.. குறையாட்டி அதுக்கு கம்பெனி பொறுப்பில்லைங்க!
(அகிலா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)