மனிதனே உனக்குள் புதியதொரு மாற்றத்தை கொண்டு வரும் எல்லா நாளுமே புத்தாண்டு தான்!

Su.tha Arivalagan
Apr 14, 2026,02:23 PM IST

- பி.ஆர்.ஹெலன்


இன்று தமிழர் புத்தாண்டு 

தமிழனுக்கென்றே கொண்டாடப்படும் புத்தாண்டு

இனிய கனிகளின் முன் கண்விழித்து 

கண்ணாடி முன் நின்று

முகம் பார்த்து

மனமகிழ் மஞ்சளுடன்

குளியலிட்டு


படைத்தவனுக்கே

படைத்ததனை படையலிட்டு

எல்லா வரங்களையும் தர வேண்டும் 

இப்புதிதொரு நன்னாளில் இறைவா




கனிவான குணத்தையும்

கண்ணாடி போன்று 

உண்மையான

பிரதிபலிப்பையும்

பெற்று 


மனிதனே உனக்குள்

புதியதொரு  மாற்றத்தை

கொண்டு வரும் 

எல்லா நாளுமே

புத்தாண்டு  தான் 

என்பதை உணர்வாயா


அறுசுவையை

உணவில் சேர்த்தால்

சுவைப்பது போல்

வாழ்வில் தோன்றும்

வெற்றிகளை ஏற்று தோல்விகளை மாற்றி

இன்பம் கானும்

இனிய நாளே இப்புத்தாண்டு

என்பதை ஏற்றுக்கொள்வாயா!


(Helen . P. R, Social teacher , GHS, Melpattampakkam , Cuddalore)