மலராய் மலரும் பொன்னாலயம் .. புயல் வந்த போதும்.. மனமே அசையா ஆலயம்!
Mar 08, 2026,06:59 PM IST
- தா. சிலம்பரசி
மலராய் மலரும் பொன்னாலயம்
புயல் வந்த போதும்
மனமே அசையா ஆலயம்..
பெண்
பிறவி ஒளியின் முதல் தீபம்
புன்னகையில் பொங்கும் ஆயிரம் வீரம்...
கருவறை முதல் உலகம் வரை
கனவுகளின் பாதை அவள் தோளில்
‘அன்பு’நிறை என்றாலே
ஆரத்தழுவுதலே அவள்
நொறுங்காத நெஞ்சம்
நெகிழும் கரங்கள்
நெடுந்தூரம் நடக்கும் நம்பிக்கைக் கனங்கள்
விழுந்தாலும் எழுப்பும் ஒளி அவள்...
விழிகளிலே வெற்றி எழுதும் வாள் அவள்
அவள் சிரிப்பு ஒரு சக்தி
அவள் மௌனம் ஒரு புத்தி
அவள் பொறுமை ஒரு பூமி
அவள் போராட்டம் ஒரு புராணம்
இன்றைய தினம்
அவளை மட்டும் கொண்டாடவில்லை…
அவளின் பயணத்தையும் பலத்தையும்
அவள் உருவாக்கும் எதிர்காலத்தையும்
வணங்குகிறோம்...!
(தா சிலம்பரசி, வேலூர் மாவட்டம்)