மெஷின் மீது அக்கறை… மனிதர்கள் மீது ஏன் இல்லை?

Su.tha Arivalagan
Apr 03, 2026,11:55 AM IST

- தெ.நாராயண லெட்சுமி, B.E


இப்போ காலம் எப்படி மாறி போயிருக்கு என்றால், சில பேருக்கு மெஷின் மேல இருக்கிற கவனம், மனிதர்கள் மேல இருக்கிறதே இல்லை போல என்று தெரிகிறது.


ஒரு போன் கீழே விழுந்தால் உடனே கவர் போடணும், ஸ்க்ரீன் காப்பாற்றணும் என்று கவலைப்படுவோம். கார் கொஞ்சம் ஸ்க்ராட்ச் ஆயிட்டா கூட உடனே சர்வீஸ் சென்டருக்கு கொண்டு போய் சரி பண்ணுவோம். மெஷின் சரியா வேலை செய்யணும் என்று எல்லா கவனமும் கொடுக்கிறோம்.


ஆனா அதே நேரத்தில், நம்ம பக்கத்தில் இருக்கும் ஒருத்தர் மனசு கஷ்டப்படுறாங்கன்னா, அவங்க சோகமாக இருக்காங்கன்னா அதை கேட்டு பார்க்க கூட பலருக்கு நேரம் கிடைக்காத மாதிரி ஆகிடுச்சு. “என்னாச்சு?” என்று கேட்கும் அந்த ஒரு வார்த்தை கூட சில சமயம் கிடைக்காமல் போகுது.


மெஷின் பழுதாகிவிட்டால் அதை ரிப்பேர் பண்ணலாம். புதியது வாங்கிக்கலாம். ஆனால் மனிதன் மனசு உடைந்தால் அதை சரி பண்ணுவது அவ்வளவு எளிது இல்லை. ஒரு வார்த்தை, ஒரு கவனம் இல்லாததால் சில உறவுகள் கூட தூரமாகி போகின்றன.




தொழில்நுட்பம் நமக்கு உதவுவதற்காக தான். வாழ்க்கையை வசதியாக்குவதற்காக தான். ஆனால் அது மனிதர்களுக்கிடையேயான அன்பையும் அக்கறையையும் குறைக்கக்கூடாது.


நம்ம சுற்றி இருக்கும் மனிதர்களிடம் கொஞ்சம் நேரம் செலவழித்து பேசினால், அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டால், வாழ்க்கை இன்னும் அர்த்தமுள்ளதாக இருக்கும்.


மெஷின்களை கவனிப்பது நல்லது…

ஆனா அதைவிட முக்கியம் மனிதர்களை கவனிப்பது தான்.


(தெ. நாராயணலட்சுமி, ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் வசித்து வருகிறார்)