ஆயுதம் ஏந்தி போராடலாமா?
Mar 05, 2026,04:15 PM IST
- மயிலாடுதுறை த.சுகந்தி, M.Sc, B.Ed, B.A (Hindi)
துபாய், அபுதாபி, பஹ்ரைன்,ஈராக் போன்ற நாடுகளில் தற்போது நடத்திய குண்டு வெடிப்புகளை பற்றி கேள்விப்பட்டிருப்போம். இது போன்ற நிகழ்வுகளை எப்படி குறைக்கலாம் அல்லது தடுக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
இன்று சர்வதேச ஆயுத குறைப்பு மற்றும் பரவல் தடுப்பு விழிப்புணர்வு தினம் . சர்வதேச ஆயுத குறைப்பு மற்றும் பரவல் தடுப்பு விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 5-ம் தேதி கொண்டாடப்படுகிறது. உலகில் ஆயுதங்களின் பயன்பாட்டை குறைப்பதற்காக இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தின் மூலம் உலக பொதுமக்கள் அமைதியாக இருப்பதற்கு வழிவகை செய்கிறது. போர்களால் ஏற்படும் அழிவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.
அணு ஆயுதங்கள் மற்றும் பிற ஆபத்தான ஆயுதங்களின் பரவலை தடுக்க வேண்டும்.இதன் மூலம் பல மனித உயிரினங்கள் மற்றும் விலங்கினங்களும் பாதுகாக்கப்படுகிறது என்பதை நினைவூட்டுகிறது.
நாடுகள் ஆயுதங்களை குறைத்து அமைதியை பேண வேண்டும் என்பதை மையப்படுத்தி நாட்டு மக்களிடையே சமாதானத்தை பேணிக்காக்க இந்த தினம் சிறப்பாக கொண்டப்படுகிறது.
ஆயுதப் போட்டி உலகத்திற்கு ஆபத்தானது என்பதை மக்களுக்கு எடுத்துரைத்து உலக நாடுகள் ஒன்றிணைந்து அமைதியை பாதுகாக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தி வருகிறார்கள். மேலும், குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு அமைதியின் முக்கியத்துவத்தை கற்பித்து தருகிறார்கள்.
ஆயுதங்களை விட உரையாடல் மூலம் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒவ்வொரு நாட்டு மக்களிடமும், அண்டை நாட்டு நட்புறவு நாடுகளும் இணைந்து சமாதான முறையை கடைபிடிக்க ஆலோசனை சொல்லி வருகிறார்கள்.
உலக அமைதி மற்றும் பாதுகாப்பு வளர வேண்டும் என்பதற்காகவும், போர்களால் பொருளாதார இழப்புகள் ஏற்படுகின்றன என்பதாலும் ஆயுதக் குறைப்பு உலக மக்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் என்பதாலும் பல சர்வதேச அமைப்புகளும் ஆதரித்து வருகிறார்கள்.
உலக மக்கள் அமைதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதை நாம் அனைவரும் எண்ணி நாட்டு மக்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து தந்து செயல்படுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்
(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள் போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)