Stop Bullying: பள்ளிகளில் அச்சுறுத்தலை ஒழிப்போம்!
- தெ.நாராயண லெட்சுமி, B.E
இன்றைய காலத்தில் பள்ளி மாணவர்களிடையே அதிகமாக பேசப்படும் ஒரு முக்கியமான விஷயம் Bullying (அச்சுறுத்தல் / இகழ்ச்சி) ஆகும். ஒருவரை வார்த்தைகளால் காயப்படுத்துதல், கேலி செய்தல், உடல் ரீதியாக துன்புறுத்துதல் அல்லது சமூக ஊடகங்களில் அவமதித்தல் போன்ற செயல்கள் எல்லாம் புல்லியிங் ஆகும். இதனால் பல குழந்தைகள் மன அழுத்தம், பயம் மற்றும் தன்னம்பிக்கை குறைவு போன்ற பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.
சரி கேலி செய்தல் என்றால் என்ன?
நண்பர்களை கேலி செய்தல், உடல் ரீதியாக துன்புறுத்துதல், பெயர் வைத்து அழைத்தல், சமூக ஊடகங்களில் அவமதித்தல்,ஒருவரை குழுவிலிருந்து தவிர்த்து தனிமைப்படுத்துதல்.
இதனால் என்னவெல்லாம் பாதிப்புகள் ஏற்படுகிறது தெரியுமா?
மன அழுத்தம் மற்றும் பயம், பள்ளிக்கு வர விருப்பமின்மை, தன்னம்பிக்கை குறைவு மற்றும் நண்பர்களுடன் சகஜமாக பழகுவதில் சிரமம் ஏற்படுகிறது.
இதைத் தடுக்க அனைவரையும் மரியாதையுடன் நடத்த வேண்டும். நண்பர்களை ஊக்கப்படுத்த வேண்டும். பிரச்சினை இருந்தால் ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். “நாம் அனைவரும் சமம்” என்ற எண்ணத்தை வளர்க்க வேண்டும்
நண்பர்களை காயப்படுத்தாமல், அன்பாக நடந்து கொள்வோம். புல்லியிங்கை நிறுத்தி, நட்பை வளர்ப்போம்!
ஒரு நல்ல வார்த்தை ஒருவரின் நாளை மகிழ்ச்சியாக மாற்றும்; ஒரு காயப்படுத்தும் வார்த்தை ஒருவரின் மனதை உடைக்கவும் செய்யும்.
(தெ. நாராயணலட்சுமி, ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் வசித்து வருகிறார்)