எளியோருக்கு உதவ இந்நாளில் முடிவெடுப்போம்!
- அ. வென்சி ராஜ்
ஞாலம் காக்கும் இறைவன்...
மனிட உருவில் தானும் பிறந்து...
உலகம் வந்து தன் அன்பின் விதிகள்....
வாழ்ந்து காட்ட முடிவு செய்தார்.......
நான்தான் கடவுள் என்ற கர்வம் இன்றி...
பெண்ணிடம் பிறக்க முடிவும் செய்து...
கன்னி மரியை தேர்ந்தெடுத்தார்...
நிச்சயம் ஆன கன்னி மரியாளுக்கு. ...
திருமணம் ஆகவில்லை என ஊருக்கே தெரியும்...
கடவுளின் தூதர் மரியின் முன் வந்து...
தூய ஆவி பொழிந்து ஆசீர்வதித்தார்...
கன்னியாகவே கருவுறுதல் கடவுளின் திட்டம் என...
வானதூதர் வாழ்த்து கூறியதுமே...
ஒரு நொடி கலக்கமுற்ற கன்னியின் உள்ளம். ..
கடவுள் மேல் நம்பிக்கை கொண்டு...
உன் அடிமை அப்படியே ஆகட்டும் என்றார்...
நிச்சயமான கணவன் சூசையின் கனவிலும்...
ஆண்டவரின் தூதர் அழகாய் தோன்றி...
நடந்தவை கூறி இறைத் திட்டம் விளக்கினார். ..
கேட்டவுடன் விலக சூசை நினைத்தாலும்...
நீதிமான் ஆதலால் மரியாளை ஏற்றும் கொண்டார்...
விண்ணக மன்னன் மண்ணகம் வர....
அரண்மனையில் உள்ள அரசியைத் தேடவில்லை...
மாட மாளிகையில் மணிமகுடம் பெற விரும்பவில்லை....
ஏழையாம் மரியா சூசையைத் தேர்ந்தெடுத்து. ..
தனக்கு ஏற்புடையவர்களாய் இறைவன் ஆக்கிக் கொண்டார்....
மக்கள் தொகை கணக்குக் குடுக்க சூசை மரியும்...
நாசரேத்திலிருந்து பெத்லகேம் செல்ல....
பெத்லகேமில் பிறக்க இறைவன் திட்டமிட்டு தங்கவும் வைத்தார்...
வீடு வீடாய் கேட்டலைந்தும்...
இறை மைந்தன் பிறப்பதற்காய். ..
இடமும் இன்றி...
ஏழ்மையாய் வடிவெடுக்க மாடடைக் குடிலைத் தேர்ந்தெடுத்தார்...
தேவமைந்தன் உலகம் காக்க. ..
ஆடம்பரம் எதுவும் அறவே இன்றி...
அன்னை மரி மடியினிலே...
மாட்டுக்குடிலில் வந்துதித்தார்...
வழிகாட்டும் விண்மீன் உதித்ததுமே...
விசும்பு புகழ் மீட்பர் இயேசு..
தரணி மீட்க உதித்த செய்தி..
தேவன் அறிவிக்க திட்டமிட்டார்...
தேவமைந்தன் தேடி வந்து மாட்டுக் குடிலில் பிறந்த செய்தி...
அரசர்க்கோ மூப்பர்க்கோ அறிவிக்கும் முன் இறைவன்...
ஏழ்மையிலே வாழ்ந்து வந்த ஆட்டு இடையர்களுக்கு அறிவிக்க ஆசை கொண்டு...
தம் வானதூதரை அவர்களிடம் அனுப்பி பிறப்பு செய்தி அறிவிக்கச் சொன்னார்.
அந்தப் பெரு மகிழ்வு நாள் வந்தது என...
ஆடிப் பாடும் கிறிஸ்மஸ் நாளில்...
ஆண்டவனின் செய்தி என்ன...
என்பதுணர்ந்து வாழ முனைவோம்...
ஆண்டவனின் அன்பு, இரக்கம், தன்னடக்கம், பணிவு, கருணை....
அத்தனையும் நாமும் கொள்ள....
ஆண்டவனை வேண்டிடுவோம்....
அன்னை மரி சூசை அவர்களின்....
கீழ்ப்படிதல் வேண்டுமென...
இறைத் திட்டம் ஏற்றுக் கொள்ள...
நம்மை நாமே கையளிப்போம்...
ஏழ்மை நிலைத் தேடி வந்த...
இயேசுவின் திட்டம் உணர்ந்து...
எளியோருக்கு உதவி செய்ய...
இன்னாளில் முடிவெடுப்போம்...
(அ. வென்சி ராஜ்... இவர் திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர். பண்ணைவிளாகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் பட்டிமன்ற பேச்சாளராகவும், தன்னம்பிக்கை பேச்சாளராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் அறியப்படுகிறார். திருவாரூர் தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு புலவர் பேரவை, இந்தியன் ரெட் கிராஸ் ஆகியவற்றில் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார். செஞ்சிலுவை சங்கத்தில் கொரடாச்சேரி இணை கண்வீனியராகவும், திருவாரூர் இன்னர்வீல் சங்கத்தில் உறுப்பினராகவும், ஹெல்ப் லைன் டிரஸ்ட் என்னும் ரத்ததான அமைப்பில் தலைமை ஆலோசகராகவும் பயணம் செய்கிறார்)