வாழ்க்கை நமக்கு சந்தோஷத்தை கொடுப்பதற்காக அல்ல (Life is not here to make us Happy)
- மைத்ரேயி நிரஞ்சனா
எதுக்குப்பா இந்த வாழ்க்கை? இந்த கேள்வி நமக்கு எப்ப வரும்? வாழ்க்கை நமக்கு பல விதமான சோதனைகள் தரும் போது தான் இந்த கேள்வி வரும்.. எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருக்கும் போது இந்த கேள்வி தோன்றுவதே இல்லை.. உண்மையா இல்லையா?
இந்த கேள்வி கூட தோன்றாமல் நம்மில் எத்தனை பேர் பரபரவென ஓடிக்கொண்டே இருக்கிறோம்? காலையில் எழுந்து பேப்பர் படித்து, வேலைக்கு போய் சாயந்தரம் திரும்ப வந்து டிவி பார்த்து தூங்கி போவது இதே தான் வழக்கமாக நடக்கிறதா? நாம் செய்வதையே நான் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுத்து எந்திரத் தனமான ஒரு Routine ல் சிக்கி விடுகிறோம்..
உங்கள் வாழ்க்கையில் எல்லாமே சரியாக போய்க்கொண்டே இருக்கிறதா? அப்ப பொறுங்கள்.. இது இப்படியே இருக்காது..
ஒரு சிறிய கதையை பார்ப்போமா?
காஷ்முஷ் கடவுளுடன் சுற்றிக் கொண்டிருந்தார்.. அப்போது கடவுளுக்கு தாகம் எடுத்தது.. காஷ்முஷ் உடனே சொன்னார்.. நான் தங்களுக்காக போய் தண்ணீர் கொண்டு வருகிறேன்..
அவர் பூமியில் இறங்கிய இடம் ஒரு காடு.. அந்தக் காட்டில் ஒரு சிறிய மலை மீது ஒரு வீடு தெரிந்தது.. அந்த வீட்டின் கதவை தட்டினார்.. கதவை திறந்தது ஒரு அழகான பெண்.. அந்த பெண் தனது பாட்டி உடன் அந்த வீட்டில் வசித்து வந்தார்.. காற்றில் திடீரென்று ஒரு இளைஞனை பார்த்தவுடன் அந்த பெண்ணும் வீட்டிற்கு அழைத்தார்.. இருவரும் பல விஷயங்கள் பேச ஆரம்பித்து விட்டனர்.. காஷ்முஷ் தான் வந்த விஷயத்தை மறந்தே விட்டார்.. இருவரும் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.. சிறிது நாட்கள் கழித்து அவர்களுக்கு குழந்தை பிறந்தது.. குழந்தை வளர்ப்பதில் காஷ்முஷ் busy ஆகி விட்டார்.. ஒரு குடும்பஸ்தனாக ஆகிவிட்டால.. எவ்வளவு பிரச்சனைகள்..? குடும்பத்திற்காக சம்பாதிக்க வேண்டும்.. இப்படி வருடங்கள் உருண்டோடின..
ஒரு நாள் பலத்த காற்று வீசியது.. பெருமழை.. அது வெள்ளமாக மாறி.. அவர்கள் இருந்த இடமே வெள்ளக்காடாக மாறியது.. வீட்டின் உள்ளேயும் தண்ணீர்..
என்ன செய்வது என்று அறியாது.. கடவுளே காப்பாற்று என்று உரக்க கத்தினார்.. அப்போது திடீரென்று ஞாபகம் வந்தது.. தான் தண்ணி கொண்டு வருவதற்காக இங்கு வந்தோமே..! மிகவும் தெளிவாக அந்த ஞாபகம் வரவும்.. வெள்ளம் வீடு மனைவி…குடும்பம் எல்லாம் மறைந்தன..
இது எல்லாமே மாயை என்று தெளிந்தார்..
இந்த மாயையும்…எல்லாமே ரொம்ப Real என்று தோன்றும்.. நம் கோபம் துக்கம் சந்தோஷம் வலி.. இன்பம் இவை எல்லாமே உண்மையாகவே தோன்றும்.
வாழ்க்கை நமக்கு சோதனைகள் கொடுத்து நாம் விழிப்பதற்கு பல விதமான சூழ்நிலைகளை உருவாக்குகிறது..
நாம் காலையில் விழித்தவுடன் இந்த கனவு நிலை ஆரம்பிக்கிறது.. காலையில் எழுந்தவுடன் உடனே இயங்க ஆரம்பிக்காமல்.. சிறிது நேரம் அமைதியாக Relax ஆக அமர்ந்து மூச்சுடன் இருப்போம்..( Being with breath ..observing breath).. தியானம்..
ஆன்மீகம் என்பது விழிப்புணர்வு.. மற்றும் நினைவு படுத்திக் கொள்ளல்..
நாம் தொடர்வோம்..
மைத்ரேயி நிரஞ்சனா.. எழுத்தாளர், பேச்சாளர், பாடகி என பன்முகத் திறமையாளராக வலம் வருகிறார். இல்லத்தரசி என்ற நிலையிலும் சிறந்து விளங்குபவர். மதுரையில் பிறந்தவர், சேலத்தில் வசிப்பவர். அடிப்படையில் ஒரு பொறியாளர். கடந்த 15 வருடமாக ஆன்மீகம் மற்றும் தியானத்தில் அதிக ஈடுபாடு. ஒரே மனித குலம் அமைய வேண்டும் என்ற கனவுடன் வலம் வருபவர். ஆன்மிகம் மட்டுமே மனிதகுலத்தை பயமற்ற, போட்டியில்லாத புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும், அங்கு பணம் மற்றும் போட்டிக்குப் பதிலாக அன்பு மட்டுமே அடிப்படையாக இருக்கும். பொறுப்புடன் கூடிய சுதந்திரமே புதிய மதமாக இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்.