Tamil Life Qoutes: தெரிந்து கொள்வதை விட புரிந்து கொண்டால் .. அன்பு ஆயுள் வரை நீடிக்கும்.!

Su.tha Arivalagan
Jun 04, 2026,10:14 AM IST

- இரா. மும்தாஜ் பேகம்


மனம் கண்களிடம் சொன்னது அதிகமாக கண்ணீர் விடாதே எனக்கு வலிக்கிறது என்று.


"நீ அதிகமாக யாரையும் நேசிக்காதே அவர்கள் உதாசீன படுத்தும்போது எனக்கு கண்ணீர் வருகிறது என்று கண்கள் பதிலளித்தது.


-


மரங்களை விட்டு பூக்கள் உதிர்கின்றன என்பதற்காக மரங்கள் திரும்பவும்  பூப்பதையோ காய்ப்பதையோ நிறுத்தி விடுவதில்லை. உறவுகள் பிரிந்து போவதனால் உடைந்து போக மாட்டேன்


-


தேடிப் போகும் அன்பு அழகானது. தேடிவரும் அன்பு ஆழமானது. அன்பை விற்கவோ வாங்கவோ முடியாது அன்பிற்கு அன்பே விலை 



ஒருவரை தெரிந்து கொள்வதை விட புரிந்து கொண்டால் தான் அந்த அன்பு ஆயுள் வரை நீடிக்கும். 


-


குற்றம் சொல்ல ஆயிரம் காரணங்கள் இருக்கலாம் மன்னிக்கவும் மறக்கவும் ஒரே காரணம் 'அன்பு' தான்.


-


புரிதல் என்பது எல்லாம் தானாக வர வேண்டும் நாம் சொல்லி புரிய வைப்பதெல்லாம் ஓட்டை பானைக்குள் நீர் வைப்பது போன்றதாகும். 


(இரா. மும்தாஜ் பேகம், கிரியேட்டிவ் ரைட்டர்ஸ், திருச்சி)