ஆரோக்கிய வாழ்வு!

Su.tha Arivalagan
Feb 06, 2026,12:43 PM IST

- கவிஞர் க.முருகேஸ்வரி


ஆரோக்கிய வாழ்விற்கு 

அடித்தளம் இடுவோம்


நடைப் பயிற்சியை 

நாளும் செய்வோம் 


உடற்பயிற்சியும் 

உடன் செய்வோம் 


நல்ல உணவு பழக்கத்தை        

நாமும் ஏற்போம்




காய்கறி பழங்கள் கீரைகள் 

உணவில் சேர்ப்போம்


எண்ணெய் பலகாரங்கள் 

எட்ட வைப்போம் 


துரித உணவை 

தூக்கி எறிவோம் 


பொறித்த உணவை 

சுருக்கி உண்போம்


கொழுப்பைக் கொஞ்சம் 

குறைத்தே சேர்ப்போம்


அலுப்பு தட்டாமல் 

உழைப்பைக் கொடுப்போம் 


அவசர காலத்தில் 

ஆரோக்கிய வாழ்வு 


ஆபத்தாய் போகுதே 

மானுடர் வாழ்வு


சிந்தித்து செயல்பட்டால்      

சீக்கிரம் கிட்டும்  சிறப்புடன் வாழ்வு!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).