அவனுள் நான்!
- கவிஞர் க.முருகேஸ்வரி
அவனுக்குத் தெரியும்....
அவனுக்குப் புரியும்...
அவன் அரவணைப்பான்..
அவன் உடனிருப்பான்...
அவன் மன்னிப்பான்....
அவன் சரி செய்வான்...
அவன் ஆறுதல் படுத்துவான்....
அவன் என் அழகைக் கூட்டுவான்....
எனக்குள் இருப்பான்....
என் நிழலாக வருவான்...
தேவையானது
அனைத்தும் தருவான்....
எனக்குத் தெரிந்த அனைத்தும்
அவன் அளித்தது...
தெரியாதது
அனைத்தும்
அவன் கொடுக்கப் போவது.....
அவன் தைரியம் கொடுப்பான்...
அவன் தன்னம்பிக்கை தருவான்...
வெற்றிக்கு வித்திடுவான்...
எப்போது எது வேண்டுமோ
அதைக் கொடுப்பான்..
என் உயிர் காப்பான்...
என் உறவுகளையும் காப்பான்...
அவன் பார்த்துக் கொள்வான்....
எனக்கு இடையூறு ஏற்படும் எனில்...
அவன் பார்த்துக் கொல்வான்....
எனக்கு எல்லாம் அவனே!!!
அவன் இருப்பதால்
நான் இருக்கிறேன்...
அவன் கொடுத்ததால்
நான் படைக்கிறேன்....
அவனே என் அப்பன்
என் அய்யன் முருகன்
அவனுள் நான் என்று!!!!
ஓம் முருகா
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).