அன்பான ஈர்ப்பு!
-வி.ஆர். விஜயலட்சுமி
ஈர்த்துக் கொள்ளும் நம்மை
நம் உயரிய அன்பே...
நாளும் கொள்ளை கொள்ளும் நம் வாழ்வே..
நீயின்றி நானில்லை....
நானின்றி நீயில்லை...
நாமன்றி நம்முலகில் வேறு யாருண்டு?
கண்களால் கலந்து கைகளால் உணர்ந்து
நெஞ்சம் மாறி புகுந்து உனக்காய் நான் அழுது ....
என் வலி பொறுக்காமல் உனது விழியோர ஈரமதை
எனது நுனி விரலால் சுண்டிவிட்டு
உன்னை நான் கண்டபோது கசிந்தது
கண்ணீர் மட்டுமல்ல நம் காதலும் தான்....
இது உறவுக் காதலா?
அன்றி உண்மைக்காதலா
அன்றி உட்புகுந்த காதலா?
உவமைக்காதலா?
அன்றி உவகைக்காதலா?
தன்மைக் காதலா
அன்றி தனிமைக் காதலா?
கருத்தொருமித்தக் காதலா? அன்றி
கருத்தாழக் காதலா?
கண்டவர் கண் பட
கைகள் கோர்த்து நாம் நடக்க
விண்ணிலிருந்து வீழ்ந்த சொர்க்கம்
நம் மனக்கண் முன் நின்று, மன்றாடி கவி பாடியது... !
(வி.ஆர். விஜயலட்சுமி, பட்டதாரி ஆசிரியர், காஞ்சிபுரம் மாவட்டம்)