புத்தகம்

Su.tha Arivalagan
Apr 18, 2026,03:54 PM IST

- மு. பாரதி


புத்தகம் 

நம்மை

உயர்த்தும் 

ஆயுதம்


நம்மை 

வழிநடத்தும் 

காகிதம் 


நமக்கு 

அறிவு

தாகத்தை 

தீர்க்கும்

களஞ்சியம் 




நாடிப் படிப்பவரை

ஏற்றிவிடும் ஆயுதம்


நமது அகத்தை தூய்மைப்படுத்தும் 

ஆயுதம்


காலத்தை பிரதிபலிக்கும் 

ஆயுதம் 


இருளை அகற்றி

வெளிச்சம் தரும்

ஆயுதம்


குணிந்து படிப்பவரை தலைநிமிர

வைக்கும்

ஆயுதம்


அறிவினை

ஊற்றாக்கும்

ஆயுதம் 


இன்னல்களை 

தூளாக்கும்

ஆயுதம்


உற்ற நண்பனாய்

வரும்

ஆயுதம்


ஊர் போற்ற

வாழ

வைக்கும் 

ஆயுதம்


கனவுகளை

நனவாக்கும்

ஆயுதம்


மனிதனை

பன்படுத்தும்

ஆயுதம் 


ஒவ்வொரு 

வீட்டிலும்

இருக்க வேண்டிய 

களஞ்சியம் 


புத்தகம் என்னும்

ஆயுதத்தை நாடுவோம்


உண்மை

உயர்ந்த சிந்தனை தன்னம்பிக்கை 

லட்சியம் 

நிறைந்த 

மனிதனாக மிளிர்வோம்


புத்தகத்தை 

துணைக் கொண்டால் 

உலகையும்

வெல்லலாம் 


(மு.பாரதி, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம் , நகராட்சி மேல்நிலைப் பள்ளி , அஸ்தினாபுரம் , சென்னை -64)