முயற்சி

Su.tha Arivalagan
Apr 28, 2026,02:06 PM IST

- மு. பாரதி


முயற்சி 

உன்னிடம் இருந்தால் 


வெற்றி உன்

வசமாகும்


வாழ்க்கை 

வசந்தமாகும் 


பதவிகள் 

தேடி வரும் 


மகுடம்

சூடி விடும்




தோல்வி 

பயந்து ஓடும் 


சாதனைகள் 

துரத்தி வரும் 


இனிமைகள்

கூட இருக்கும் 


தன்னம்பிக்கை நிலைத்து நிற்கும் 


ஆற்றலை 

வெளிக் கொண்டு 

வரும்


வானமும்

வசப்படும் 


மனிதனுக்கு 

சுவாசம்

நின்றால் மட்டும் 

இறப்பு இல்லை 


முயற்சி இல்லை 

என்றாலும்

சுவாசம் அற்றவரே


உணர்ந்து

தெளிந்து

 

முயற்சியை 

வாழ்க்கையில் 

துணையாய்க்

கொள்


ஏறு நடை

போட்டு

உலகில்

நிமிர்ந்து 

செல்


(மு.பாரதி, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம் , நகராட்சி மேல்நிலைப் பள்ளி , அஸ்தினாபுரம் , சென்னை -64, 

செங்கல்பட்டு மாவட்டம்)