Poem: அன்பை விதை ஆற்றலை விதை!
Mar 31, 2026,12:42 PM IST
- மு. பாரதி
தரணியில்
அன்பை விதை
ஆற்றலை விதை
ஆர்வத்தை விதை
நம்பிக்கையை விதை
நற் சிந்தனையை விதை
பண்பை விதை
பணிவை விதை
சிக்கனத்தை விதை
சேமிப்பை விதை
முயற்சியை விதை
வாசிப்பை விதை
பொறுமையை விதை
ஒற்றுமையை விதை
ஒருமைப்பாட்டை விதை
எவ் ஊராயினும்
எந்நாடாயினும்
எம்மொழியாயினும்
ஒருமைப்பாடு என்னும் விதை
சகோதரத்துவம் என்னும் செடியாக முளைத்து
அமைதி என்னும் மரமாக உயர்ந்து
தென்றல் இதமாய் வருடிக் செல்லும்
சோலைவனமாய் படர்ந்து
நாம் விதைத்த விதையில்
அன்னை பூமி
மிளிரும்.
(மு.பாரதி, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம் , நகராட்சி மேல்நிலைப் பள்ளி ,அஸ்தினாபுரம் , சென்னை -64)