ஐவகை நிலங்களின் பெயரில்.. மாணவர் தலைவர், அமைச்சரைத் தேர்வு செய்யும்.. மகிழ் முற்றம்
Jul 13, 2026,05:24 PM IST
- மு. பாரதி
பள்ளியில் மாணவத் தலைவர்,
அமைச்சரை
பொறுப்புடனும்
மகிழ்ச்சியுடனும்
தேர்ந்தெடுக்கும்
மகிழ் முற்றம்
குறிஞ்சி
முல்லை
மருதம்
நெய்தல்
பாலை
என
குழுவாய் இயங்கும்
மகிழ் முற்றம்
தலைமை பண்பு
சமூகப் பண்பு
குழுப் பணி செய்தல்
ஒழுக்கம் பேணுதல்
குழு செயல்பாடு
என
மகிழ் முற்றம்
பள்ளியின் வளர்ச்சி
பாதுகாப்பு
சுகாதாரம்
ஒற்றுமை
என
மகிழ் முற்றம்
திறமைகளை
அடையாளம் காணும்
மகிழ் முற்றம்
வாய்ப்புகளை
வழங்கும்
மகிழ் முற்றம்
தலைவனை உருவாக்கும்
மகிழ் முற்றம்
கற்பனைகளை
நனவாக்கும்
மகிழ் முற்றம்
இது
அரசுப் பள்ளிகளின்
மகிழ் முற்றம்.
(மு.பாரதி, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம் , நகராட்சி மேல்நிலைப் பள்ளி , அஸ்தினாபுரம் , சென்னை -64)