Happy Poem: மகிழ்ச்சி!
Nov 01, 2026,08:21 AM IST
- மு.பாரதி
மரம் நடுவது
பூமிக்கு
மகிழ்ச்சி
மழை பொழிவது
மரத்திற்கு
மகிழ்ச்சி
வானத்தில் கூட்டமாய் பறப்பது
பறவைகளுக்கு
மகிழ்ச்சி
ஆற்றில்
துள்ளிக் குதிப்பது
மீன்களுக்கு
மகிழ்ச்சி
எப்பொழுதும் சுறுசுறுப்பாய் இருப்பது
எறும்புகளுக்கு
மகிழ்ச்சி
துள்ளி ஓடுவது
மான்களுக்கு
மகிழ்ச்சி
ஒற்றுமையாய் இருப்பது
குடும்பத்திற்கு மகிழ்ச்சி
தூய்மையாய் வைத்து கொள்வது
சுற்றுப்புறத்திற்கு
மகிழ்ச்சி
இனிய சொற்களை கேட்பது
மனதிற்கு
மகிழ்ச்சி
வன்முறை,போர்
இல்லாமல்
அகிம்சையை
பின்பற்றுவதே
மனிதகுலத்திற்கு
மகிழ்ச்சி .
(மு.பாரதி, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம், நகராட்சி மேல்நிலைப் பள்ளி, அஸ்தினாபுரம், சென்னை -64)