அம்மா....!
Jan 31, 2026,05:20 PM IST
- மோ. லட்சுமி
எத்தனை எத்தனை சக்தி...
எத்தனை எத்தனை யுக்தி...
அத்தனையும் மொத்தமான
செல்வத்துள் செல்வமே அம்மா...
மம்மி என்றாலும் மனம் மலராது...
மதர் என்றாலும் குணம் மாறாது...
அம்மா என்ற மந்திரத்தை
உச்சரித்தால் வரும் மெய் சிலிர்ப்பு...
என் தாய் மொழியால் வந்த சக்தியா...
என் தாயால் வந்த முக்தியா....
அம்மா என்ற வார்த்தையின் மாயம்....
ஆற்றிடுமே அனைத்து காயம்....
கண்மூடி அம்மா என்றால் வரும் சுகம்...
அதைக் கடக்க போதாது ஒரு யுகம்...
அம்மா என்றால் உதடுகளும் ஒட்டும்.....
அது நம் உணர்வுகளையும் பெரிதாய் தட்டும்....
அம்மாவிற்கு ஈடு இணை இல்லை...
அவளே என் வாழ்வின் எல்லை....!
(மோ. லட்சுமி, திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு தாலுகா, பெரியகளக்காட்டூர் தொடக்கப் பள்ளி ஆசிரியர்)