Madurai Sourashtra recipe: சத்தான சுவையான.. கறுப்பு முழு உளுந்து சுண்டல்!
- மணிமா
செட்டிநாட்டு அடுப்படியின் ரெசிபிகளுக்கு அமோக ஆதரவு தரும் தங்கள் அனைவருக்கும் அன்புடன் வணக்கம் கூறுவது உங்கள் ......மணிமா ....
செட்டிநாட்டு அடுப்படியிலிலிருந்து சற்று விலகி இன்று ஒரு வித்தியாசமான டிஷ் பார்க்கப் போகிறோம்.
இன்று நாம் செய்யப்போவது ஒரு வித்தியாசமான ரெசிபி. ஒரு மாறுதலுக்காகவும் ருசி மிகுந்த சத்துக்காகவும் கருப்பு முழு உளுந்து வைத்து ஒரு சுண்டல் ரெசிபி. இது செட்டிநாடு ரெசிபி அல்ல.
நான் பிறந்து வளர்ந்த மதுரையில் என் தோழிகள் சௌராஷ்டிரா மக்களின் மிக உன்னதமான ரெசிபி. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் சத்தான புரோட்டின் நிறைந்தது. ஒரு மாறுதலுக்காக இந்த ரெசிபி செய்வது மிக எளிது நேரம் குறைவு. வாருங்கள் வாருங்கள்.
கறுப்பு முழு உளுந்து (இட்லிக்கு போடும் அரை பருப்பாக உள்ள கருப்பு தோல் உளுந்து வேண்டாம்)
200 கிராம் அல்லது ஒரு கப் அளவு
இதனை இரண்டு முறை நன்கு கழுவி விட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்து விட்டு குக்கருக்குள் சேர்த்து ஒரு கப்புக்கு இரண்டு கப் தண்ணீர் விட்டு பத்து நிமிடம் 12 நிமிடம் வேக விடவும். தண்ணீர் அத்தனையும் எடுத்துக்கொண்டு சுண்டல் பதமான பதத்தில் வெந்திருக்கும்.
(தண்ணீர் குறைவாக இருந்தால் சரியாக வேகாமல் போகலாம் தண்ணீர் அதிகமாகி விட்டால் குழைந்து போய்விடும்) இதனைத் தவிர்ப்பதற்கு கொதிக்கும் தண்ணீரில் நேரடியாக ஊறிய உளுந்தை போட்டு வேக விடலாம். சரியான அளவு வெந்த பிறகு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இதற்கு தேவையான ஒரு பொடி தயார் செய்து கொள்வோம். வெகு எளிதாக..
தேவையானபொருட்கள்
பொட்டுக்கடலை 200 கிராம் (முழு பொட்டுக்கடலையாக இருந்தால் கூடுதல் சிறப்பு)
உப்பு அரை ஸ்பூன்
மிளகாய் வற்றல் இரண்டு
பெருங்காயத்தூள் கால் ஸ்பூன்
இவற்றை ஒரு ஈரம் இல்லாத மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும் (நைசாக மாவு ஆகி விடக்கூடாது)
அவ்வளவுதான் சாப்பிடுவதற்கு ரெடியாகிவிட்டது.
பரிமாறப் போகும் பொழுது நால்வருக்கு நான்கு கப்புகள் எடுத்து நான்கு ஸ்பூன் உளுந்தை அதில் போட்டு அரை ஸ்பூன் அல்லது முக்கால் ஸ்பூன் பொடி தூவி பிரட்டி விட்டு சாப்பிட கொடுக்கவும். எப்பொழுது சாப்பிட போகிறோமோ அப்போது மட்டுமே அந்த தூளை தூவிக்கொள்ள வேண்டும். அதி அட்டகாசமாக அபாரமான ருசியில் சூப்பராக இருக்கும். எவ்வளவு எளிது பாருங்கள்.
வித்தியாசமான ரெசிபியை எனக்குக் கற்றுக் கொடுத்த என் தோழிகளுக்கு நன்றி
அடுத்த முறை அட்டகாசமான செட்டிநாட்டு ரெசிபியுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை என்றென்றும் அன்புடன் உங்கள்
.....மணிமா ....