கமகமக்கும் மதுரை சாம்பார்.. சாப்பிட்டுப் பாருங்க.. சும்மா அள்ளும்ல!

Su.tha Arivalagan
Feb 20, 2026,04:39 PM IST

- கவிஞர் க.முருகேஸ்வரி 


மதுரை என்றாலே நான்வெஜ் சாப்பாடு மட்டுமா பேமஸ்.. சைவத்திலும் சத்தாய்ப்பாங்கள்ள மதுரைக்காரங்க.. மதுரையில் வைக்கும் சாம்பார் இருக்கே.. மணமே மனசை தாலாட்டுமே.. அதிலும் மதுரை சாம்பார் என்றாலே சின்ன வெங்காயம் அதாவது சாம்பார் வெங்காயம் தான் ஸ்பெஷல்....


துவரம் பருப்பு அதில் ஒரு பத்து பன்னிரண்டு சின்ன வெங்காயம் இரண்டு தக்காளி சேர்த்து கொஞ்சம் பெருங்காயம் சேர்த்து நன்றாக வேக விடவும் ...




ஓரளவு வெந்தவுடன் தேவையான காய்கறிகளை நறுக்கி அதனுடன் சேர்க்கவும்...


பொதுவாக கத்தரிக்காய், கேரட் முருங்கைக்காய்  உருளைக்கிழங்கு சேர்த்துக் கொள்ளலாம். இரண்டு பச்சை மிளகாயையும் சேர்த்துக் கொள்ளலாம்.. பின்னர் காய் ஓரளவு வெந்தவுடன் சாம்பார் பொடி அல்லது வீட்டில் அரைத்து வைத்திருக்கும் மசால் பொடி தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும் . 


நன்றாக வெந்தவுடன் அதில் சிறிதளவு தேங்காய் மற்றும் நான்கு ஐந்து சாம்பார் வெங்காயமும் சேர்த்து நன்றாக அரைத்து சேர்த்து விட்டு சிறிது நேரத்திற்கெல்லாம் இறக்கிவிடவும்...


கடுகு கருவேப்பிலை நறுக்கி வைத்திருக்கும் ஆறேழு சாம்பார் வெங்காயம்‌ சேர்த்து தாளித்து சாம்பாரில் கொட்டி மூடி விடவும்.


மாங்காய் இருந்தால் மற்ற‌ காய்கள் வெந்த பிறகு தேங்காய் விழுதை சேர்ப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு நான்கு ஐந்து துண்டுகள் சேர்த்துக் கொள்ளவும்...


சுவையான மதுரை சாம்பார் ரெடி...!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).