மதுராந்தகத்தில் தவெக.. தாராபுரத்தில் அதிமுக முன்னிலை.. பரபரக்கும் வாக்கு எண்ணிக்கை!

Su.tha Arivalagan
Oct 09, 2026,09:59 AM IST

சென்னை : மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தல் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், தவெக மதுராந்தகத்திலும், அதிமுக தாராபுரத்திலும் முன்னிலை வகிக்கின்றன.


மதுராந்தகம் தொகுதியில் திமுக 2வது இடத்திலும், தாராபுரத்தில் 3வது இடத்திலும் உள்ளது.


மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 06ம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டு  வருகின்றன. இந்த தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர், இடதுசாரிகள் என 5 முனை போட்டி நிலவியது. இதில் யார் வெற்றி பெற போகிறார்கள்? மக்களின் ஆதரவு யாருக்கு உள்ளது என்பது அறிய அனைவரும் ஆவலாக காத்திருக்கும் நிலையில் மதுராந்தகத்தில் 21 சுற்றுக்களாகவும், தாராபுரத்தில் 23 சுற்றுக்களாகவும் ஓட்டுக்கள் எண்ணப்பட உள்ளன.


இதுவரை வெளியான ஓட்டு எண்ணிக்கை நிலவரங்களின் அடிப்படையில், மதுராந்தகம் தொகுதியில் தவெக முன்னிலை வகித்து வருகிறது. இங்கு திமுக 2வது இடத்திலும், அதிமுக 3வது இடத்திலும் உள்ளன. நாம் தமிழர் கட்சி 4 மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் 5வது இடத்திலும் உள்ளனர்.




தாராபுரம் தொகுதியில் முதலில் தவெக வேட்பாளர் சத்யபாமா முன்னிலை வகித்தார். ஆனால் எதிர்பாராத திருப்பமாக தற்போது அதிமுக வேட்பாளர் பானுமதி முன்னிலை வகிக்கவுள்ளார். 3வது இடத்தில் திமுக உள்ளது. 


மதுராந்தகம் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 11வது மேஜையில் உள்ள இவிஎம் மிஷினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அந்த விவி பேலட்டில் பதிவான ஓட்டுக்கள் மட்டும் எண்ணப்படாமல் உள்ளது. கோளாறை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.