மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜீத் பவார்.. விமான விபத்தில் உயிரிழப்பு!

Su.tha Arivalagan
Jan 28, 2026,10:46 AM IST

மும்பை: மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜீத் பவார் பயணம் செய்த தனி விமானம் விபத்துக்குள்ளாகி அதில் பயணித்த அஜீத் பவார் உள்ளிட்ட 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.


மும்பையிலிருந்து பாராமதிக்கு அஜீத் பவார் சிறிய ரக தனி விமானத்தில் பயணித்தார். விமானம் பாராமதியில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளாக்கி தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. விமானம் முழுமையில் தீயில் கருகிப் போனது.


தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து அஜீத் பவார் உள்ளிட்ட அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் யாருமே உயிர் பிழைக்கவில்லை. ஆறு பேரும் இறந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.




காலை சுமார் 8:45 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. பாராமதி விமான நிலையத்திற்கு சற்று முன்பு விமானம் விபத்துக்குள்ளாக்கி தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்துக் கொண்டது. 


விமானம் தரையிறங்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாகவும், விபத்தைத் தொடர்ந்து விமானம் தீப்பிடித்து எரிந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


அஜித் பவார் பாராமதியில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதற்காகச் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 


அஜீத் பவார், அவரது உதவியாளர், 2 தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகள், 2 பைலட்டுகள் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.