வலிகள் பல தாங்கி வாழ்க்கை பயணத்தில்.... !
- சிவ ஆ மலர்விழி ராஜா
பெண்ணாய் பிறந்திடவே
பெருந்தவம் செய்தவளே.... !
மண்ணில்
பிறந்துதித்த
மாந்தர் குல
மணி விளக்கே.....!
பேதை பெதும்பை
மங்கை மடந்தை என்றும் .....!
அரிவை
தெரிவை பேரிளமென
பெண்ணினம் வளர்ந்து
போற்றிடவே..... !
நானிலம் போற்றும்
மங்கையென....
விண்ணிற்கும்
மண்ணிற்கும்
பெருமை தந்தவளே.... !
கண்ணின் மணியாக
கடமை கண்ணியம்
காத்திடவே.....!
கட்டுப்பாடு என்ற உணர்வுடன்
வாழ்ந்திடவே..... !
கழநியில் பயிர்
செய்து கதிரினை
சுமப்பவளே...... !
சுமைகள் பல ஏற்று
சுகத்தினை தருபவளே..... !
வையத்தை
காத்திடவே
வீரத் திருமகவை
தீரமுடன்
பெற்றவளே......!
மாதராய்
பிறந்திடவே
மா தவம் செய்தவளே......!
வலிகள் பல
தாங்கி வாழ்க்கை பயணத்தில்.... !
சோதனைகள் பல வென்று சாதனை
படைப்பவளே....... !
பெண்ணினமென்ற
ஏளனபார்வை
வென்று.....!
எதிலும் பெண் என்று
ஏகமும் நீயானாய்..... !
பெண்ணே நீ வாழ்க
பெண்ணினம் சுமை என்ற பேதமை மாறிடவே..... !
பெண்ணே நாட்டின்
கண்கள்...... !
வாழ்க பெண்ணினம்
அன்பு சகோதரிகளுக்கு
இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்!