அன்பெனும் அம்பு

Su.tha Arivalagan
Oct 20, 2026,10:54 AM IST

- சிவ.ஆ. மலர்விழி ராஜா, சீர்காழி


அன்பெனும் அம்பினால் 

அனைத்தையும் மாற்றலாம் !


கோபத்தின் கல்லையும் 

கனிவால் கரைத்திடலாம் !


கசந்திடும் உள்ளத்தை

கருணையால்

நனைத்திடலாம்  !


காயப்படுத்தும் அம்புகள் 

காற்றோடு மறையட்டும் !




கண்ணீர்சிந்தும் நினைவுகள்

கனிவோடு மலரட்டும் !

 

பகைமை என்றசொல்லும்

பாசத்தால் மாறட்டும் !


மனிதநேயம் என்னும் 

மலர்வனமும் பூக்கட்டும் !


வார்த்தைகள் சிலநேரம்

வாளாக மாறிடலாம்   !


வலியுற்ற 

நெஞ்சமதும் மௌனத்தில்

மூழ்கிடலாம்  !


வெறுப்பெனும் இருளுக்குள்

விளக்கினை ஏற்றிடலாம்  !


இனிமையான சொற்களையே

இதயத்தில் விதைத்திடுவோம் !


வாழ்க்கை பயணத்தில்

வெற்றியில் மகிழ்ந்திடுவோம்   !


அன்பெனும் அம்பினால் அனைத்தையும்

மாற்றிடலாம்  !


அன்பை விதைத்தே

ஆலயமாய் வாழ்ந்திடுவோம் !


(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர்)