அன்பையே ஆயுதமாக்கி அகிம்சையில் வென்று!
Oct 02, 2026,06:47 PM IST
- சிவ.ஆ. மலர்விழிராஜா, சீர்காழி
அன்பையே ஆயுதமாக்கி அகிம்சையில் வென்று
இனிமை பேச்சினால்
இதயத்தில் நின்று
மனிதநேயம் மலர
மகாத்மாவாக மலர்ந்து
உலகம் வியந்திடவே
உண்மையாய் ஒளிர்ந்து
உப்பிற்கு உரிமைகேட்டு
உழைப்பின்பெருமை
சேர்த்து
எளிமை தோற்றத்தில்
எழுச்சியை விதைத்து
வன்முறையை எதிர்த்து
அன்பினை விதைத்து
தன்னலம் மறந்து
தர்மத்தின்வழி நடந்த
சத்யாக் கிரகத்தின்
சரித்திர நாயகன்
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர்)