சிவமே சிவமே அருள்வாய் சிவமே....!
- சிவ.ஆ. மலர்விழி ராஜா
சிவமே சிவமே அருள்வாய் சிவமே....
அண்ணா மலையே
அருள்புரிவாயே.....!
ஆதியும் நீயே
அந்தமும் நீயே....
அண்ணா மலையே
அனைத்தும் நீயே.....!
உன்னில் பாதி உமையவள் தானே....
உருகும் எனக்கு
உயிரும் நீயே.....!
உனை போல் தெய்வம்
உலகினில் இல்லை ....
நீயே எந்தன்
இதயத்தில் எல்லை.....!
தாயாய் வந்து தயை புரிந்தாயே ....
தந்தையாய் எனக்கு
அருள் செய்வாயே......!
நிலவினை பிறையாய்
சூடி நின்றாயே......
நிம்மதி வாழ்வு
தந்தருள்வாயே.....!
உள்ளம் உருகி உனை
தேடி நின்றேன்.....
ஒளியாய் நீயும் ஒளிர்ந்தருள்வாயே....!
உன் திருநாமம்
சொல்லிட இன்பம்.....
சிவமே சிவமே
என்றால் தவமே......!
சிந்தையில் என்றும்
நிலை பெற வேண்டும்.....
நிம்மதி வாழ்வு நீ
தர வேண்டும்......!
காணும் காட்சியில்
நீ வர வேண்டும்.....
காலம் முழுவதும்
துணை வர வேண்டும்....!
சிவமே சிவமே அருள்வாய் சிவமே.....
எல்லாம் சிவமே
அருணாச்சலனே
அருள் புரிவாயே......!
உயிரும் நீயே...
உடலும் நீயே....
அணுவில் அணுவாய்
நிறைந்தாய் தேவா.....!
ஆட்சியும் செய்து
காட்சியும் தந்து......
உலகினில் வாழ
வரமளிப்பாயே.......!
சிவமே சிவமே
திருவடி பணிந்தோம்.....
அண்ணா மலையே
அருணாச்லனே......!
அன்பே சிவமாய்
வாழவைத்தாயே......
ஆனந்த வாழ்வும்
எனக்களிப்பாயே.....!
உருகும் நெய்யாய்
உளமே புகுந்தாய்.....
உன்னை தவிர்த்து
ஒரு நினைவும் வேண்டேன்......!
கண்ணில் ஒளியென
நீ வர வேண்டும்....
கருத்தில் நின்று
கவிதர வேண்டும்......!
ஜோதி வடிவில் காட்சியும் தந்து
பேரின்ப நிலையை
தந்தருள்வாயே.......!
சிவமே சிவமே
எல்லாம் சிவமே......
என்னில் எதுவும்
எல்லாம் சிவமே.....!
அண்ணா மலையே
அருணாச்சலனே.....
அருள்வாய் அருள்வாய்
அருணை பதியே......!
ஓம் நமசிவாய வாழ்க .....
வாழ்க.....
திருச்சிற்றம்பலம்.....!
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)