என்னம்மா ஏன் காலேஜ் போகல.... மெல்லிய பூங்காற்று (2)

Su.tha Arivalagan
Apr 07, 2026,04:07 PM IST

- சிவ .ஆ.மலர்விழி ராஜா


பெண்ணின் மென்மையான மனம்

அதுவே அவளின் அழகான குணம். 


ஆடலும் பாடலும் சில தினம். 

ஆண்டுகள் கடந்து செல்லும் போது வாழ்க்கையே அவளுக்கு ஒரு தவம். 

 

என்னம்மா ஏன் காலேஜ் போகல...


அப்பாவின் குரல் கேட்டு சற்று தயங்கிய நிலையில் இல்லப்பா உடல் நலம் கொஞ்சம் சரியில்லைப்பா என்றாள் பூவிதா. 


ஏன்மா என்னாச்சுடா

அப்பாவின் பரிவான அன்பு ஓவென அழத் தோன்றியது அவளுக்கு. 


ஒன்றுமில்லை பா

சற்று காய்ச்சல் போல் உள்ளது. 




பதறிப் போன அவர் சட்டென நெற்றியில் கை வைத்தார். 

விலகிய அவள் இப்போது பரவாயில்லை பா என்றாள். 


அப்பாவிடம் எப்படி சொல்வது என யோசித்தாள் பூவிதா. 


அழகான குடும்பம் அன்பான அம்மா. 

பாசத்தை கொட்டும் அப்பா. 

உலகத்தில் உன்னை விட எதுவும் பெரியதில்லை என அன்பின் அடைக்கலமான தங்கை தீபிகா. 


இவர்களின் மிகச்சிறந்த

உறவாக  வாழ்வதில்

மகிழ்ந்தவள்....


இன்று  சொல்வதற்கு தயங்கி மனம் வருந்தி

நிற்கும் போது அவளது

கண்களில் திரளும் நீரை மறைக்க முடியாமல் திணறினாள்

பூவிதா.


மேகம் திரள்வது போல் கண்ணீர் திரள அப்பாவை நிமிர்ந்து பார்க்க தைரியமின்றி தலை கவிழ்ந்தாள்.


என்னம்மா...? 


ஏன் ஏதோ சிந்தனையிலேயே இருப்பது போலவே உள்ளது. 

நேரமாகி விட்டது. சீக்கிரம் ரெடியாகி வா..... 


அப்பாவின் சற்று அதட்டலான குரல்

கேட்டு சட்டென நகர்ந்து

சென்றாள்.


இன்று என்ன பிரச்சனை செய்வானோ

என்கிற சிந்தனையில்

அவசர அவசரமாக 

பின்னலிட்டு 

வெளிர் நீலநிற சுடிதாரில் 

ஒரு தேவதையாக

வாசல் வந்தவள் வீதியில் சற்று தூரத்தில் யாரோ தன்னை எதிர்பார்த்து காத்திருப்பது போன்ற உணர்வினால்  திகைத்து நின்றாள் பூவிதா. 


( தொடரும்)


(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர்)