தேனினும் இனிய.. பேரருள் நிறைந்த திருவாசகம்!

Su.tha Arivalagan
Sep 26, 2026,04:32 PM IST

- ஔவையார் 


சிவபுராணம் 


திருவாசகத் துதி 


தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே _எல்லை மருவா நெறி அளிக்கும்  வாதவூர் எங்கோன் திருவாசகம் என்னும் தேன்.

 

நம்மை தொடர்ந்து வரும் பிறவிப்பினியையும், உலக துன்பங்களையும் நீக்கி எல்லையற்ற பேரின்ப முக்தி நிலையை தரக்கூடிய தேன் போன்ற இனிய நூல் வாதவூர் அடிகளாகிய மாணிக்கவாசகரின் திருவாசகம் என்னும் பேரருள் நிறைந்த நூலாகும் 


திருச்சிற்றம்பலம்




1.நமச்சிவாய வாழ்க  நமசிவாய என்ற ஐந்து எழுத்து மந்திரம் வாழ்க!

நாதன் தாள் வாழ்க நமச்சிவாய என்ற ஒலிக்கு தலைவனானசிவம் வாழ்க!

2 இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க _ கண்ணிமைக்கும் கால அளவில் கூட அடியேனின் நெஞ்சை விட்டு நீங்காத பெருமானின் தாள்(திருவடி)

 வாழ்க.( இந்த சிறப்பு மிக்க வரியே சி யூ போப் அவர்களை திருவாசகம் மொழி பெயர்க்க கவர்ந்த வரி என்று  திருசோ. சோ. மி.ஜயா அவர்கள் தன் சொற்பொழிவில் அடிக்கடி கூறுவார் 

3 கோகழி ஆண்ட குரு மணிதன் தாள் வாழ்க  கோகழி என்னும் திருவாவடுதுறை யில் எழுந்தருளி இருக்கும் இறைவனது தாள்வாழ்க!கோகழி என்பதற்கு திருப்பெருந்துறையையும் குறிப்பிடுவர், மதுரைக்கு அருகிலுள்ளது திருப்பெருந்துறை எனவே அங்கு தலைவனாக விளங்கும் எம்பெருமான் குருவாக வந்து மாணிக்கவாசகருக்கு உபதேசம் செய்ததால் இறைவனது தாழ் வாழ்க என்று குறிப்பிடுகிறார் 

4 ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க! ஆகம ஞானத்தின் நுண்பொருளை வழங்கி நெருங்கி வருவோன் இனிமை செய்வோன் தாள் வாழ்க! 

5 ஏகன் அனேகன் இறைவன் அடி வெல்க _ ஒருவனாகவும் பலவாகவும் பலராகவும் எங்கும் நிறைந்துள்ள இறைவன் அடி வெல்க!

6 வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க!_ பிறவியின் கொடுமைஎன்னும் பிடியில் சிக்கி உள்ள  மனதின் ஓட்டத்தை அழித்து அடியேனை ஆண்டு கொண்ட தலைவன் அடி  வெல்க

7 பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்_கழல்கள் வெல்க!

 பிறவிதளைகளை கலைந்து எரியும் விரிசடை உடைய எம்பெருமானது காலில் அணிந்துள்ள கழல்கள்(காப்பு, தண்டை, திருப்பாதம்இவற்றையும் குறிக்கும் )வெல்க  

8 புறத்தாருக்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க  அதாவது அகத்தில் மட்டுமல்லாமல் உன்னை விட்டு அகன்று இருப்பவர்களையும் குழந்தை போல் தாங்கி பிடிக்கும் இறைவனது பூங்கழல்கள் வெல்க  

9 கரம் குவிவர் உள்மகிழும் கோன் கழல்கள் வெல்க  கைகளை குவித்து எம்பெருமானை உள் வைத்து வணங்கி மகிழும் இறைவனது கழல்கள் வெல்க

10  சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க  தலைக்கு (சகஸ்தரம்)மேல் கைகளை தூக்கி உன் அருளை உள்வாங்கி மகிழும் (சிரோன்) சிறப்பு வாய்ந்த எம்பெருமான் கழல் வெல்க!


திருச்சிற்றம்பலம்


(தொடரும்)


(மாலதி ராஜாராம், ஜெயங்கொண்டம் நகரைச் சேர்ந்தவர். உழவாரப்பணி மற்றும் தேவாரம் திருவாசகம் முற்றோதுதல் செய்தல் தையல் மற்றும் கைவினைப் பொருட்கள் செய்தல் பொழுதுபோக்கு ஆகும். இல்லத்தரசி)