என் 68 வருட வாழ்க்கை நதியோட்டம்!

Su.tha Arivalagan
Sep 23, 2026,04:28 PM IST

கவிஞர் மல்லிகா செல்வராஜ்


இனிய குடும்பத்தில் 

இளைய மகளாய் பிறந்தேன்!!

செல்லமாய்!!

வெல்லமாய்!!

பாயும் நதி வெள்ளமாய்!!


உற்சாகம் ததும்பும் 

பூம்புனலாய் வளர்ந்தேன்!!


பள்ளி நட்பாம் பல

கிளை நதிகளோடு!!

துள்ளி ஓடும் கன்றாய் 

நடை பயின்றேன்!!




சிறந்த குடும்பத்தின்

தலை மருமகளாய்

புகுந்த வீடு புகுந்தேன்!


அருவி அமைதியான 

நதியாகி!! பொறுப்பு மிக்க மதியாகி!!

பதியின் பாதியாகி!!

கடமையே கதியாகி!!


விதியின் வீரியத்தால்

விசித்திரங்கள் பல 

கண்டாலும் 

அன்பால் அரவணைக்கும் 

சொந்த பந்தங்களாலும்!!


ஆறுதல் படுத்தும் 

யோகாவின்

யோக நட்புகளாலும்!!

அனைத்திலும் வென்று!!

வாகை சூடி மகிழ்கிறேன்!!


பங்கஜ அன்னை

அருளிய வாழும் கலையால் மணக்கிறேன் 

மல்லிகை மலராய்!!

சிரிக்கிறேன் 

சிந்தனை சிறப்பாய்!!


(கவிஞர் மல்லிகா செல்வராஜ், தித்திக்கும் சத்தான கடலை மிட்டாய்க்குப் பெயர்பெற்ற  கோவில்பட்டியில் வசிக்கும் பல்கலை வித்தகர், மல்லிகை மலர் போன்று வெள்ளை மனமும், மென்மை குணமும் கொண்ட மங்கை இவர்!! இயற்கையை நேசித்து, எழுத்துக்களை வாசித்து, நேசத்தை சுவாசித்து வாழும் நங்கை இவர்! இனிய இல்லத்தரசி! கவிதைகள் புனைவது, திரையிசைப் பாடலின் மெட்டிற்கு ஏற்ற சந்தங்கள் அமைத்து சொந்த வரிகளில் இசைபடிக்கும் வல்லமை பெற்றவர்)