Malliga Selvaraj Poem: கோலங்கள்!

Su.tha Arivalagan
Oct 03, 2026,01:30 PM IST
- கவிஞர் மல்லிகா செல்வராஜ்

சின்னச் சின்ன 
புள்ளிகள் வைத்து

சன்ன சன்ன கம்பிகளாக 
இணைத்து

வண்ண வண்ண 
பொடிகள் தூவி

மண்ணில் மலர்ந்திடும்
மந்திர மலர்கள்!



கைகளைக் கருவியாக்கி
பெண்களை பிரம்மன் ஆக்கி
கற்பனைகளை வடிவம் ஆக்கி

சிற்பம் போல் 
உருவமெடுக்கும் அற்புதங்கள்!!

இல்லத்தை 
மங்கலம் ஆக்கிடும்!!

உள்ளத்தை உற்சாகப்படுத்திடும்!!

பெண் இனத்திற்குப்
பெருமை சேர்த்திடும்!!

முத்திரை பதிக்கும் 
சித்திரப் பதிகங்கள்!

(கவிஞர் மல்லிகா செல்வராஜ், தித்திக்கும் சத்தான கடலை மிட்டாய்க்குப் பெயர் பெற்ற கோவில்பட்டியில் வசிக்கும் பல்கலை வித்தகர். மல்லிகை மலர் போன்று வெள்ளை மனமும், மென்மை குணமும் கொண்ட மங்கை இவர்!!  யற்கையை நேசித்து, எழுத்துக்களை வாசித்து, நேசத்தை சுவாசித்து வாழும் நங்கை இவர்! இனிய இல்லத்தரசி! கவிதைகள் புனைவது, திரையிசைப் பாடலின் மெட்டிற்கு ஏற்ற சந்தங்கள் அமைத்துச் சொந்த வரிகளில் இசைபடிக்கும் வல்லமை பெற்றவர்!)