கோலாகல கொலு!

Su.tha Arivalagan
Oct 13, 2026,02:44 PM IST

 - கவிஞர் மல்லிகா செல்வராஜ்


புரட்டாசியின் புனிதமாம்!

புரட்சியான

புண்ணியமாம்!

படிகள்தனில் 

வீற்றிருக்கும் 

பதுமைகளாம்!


பழமை தனை 

போற்றும் 

புதுமைகளாம்!

வீதியெங்கும் 

தோரணமாம்!




கொலு அமைந்த

காரணமாம்!

தினமும் ஒரு 

சுண்டலாம்!

பொங்கல் கூட 

கிண்டலாம்!


கொலுசு மணி

ஒலிக்க ஒலிக்க!

மலர்கள் சூடி

மணக்க மணக்க!


பொன்னாபரணங்கள் 

ஒளிர ஒளிர!

மங்கலங்கள் 

துலங்க துலங்க!


ஆன்மீக அருள் 

மிளிர மிளிர!

உளம்தனில் உவகை

வளர வளர!

மங்கையரே!


வருக! வருக!

நவராத்திரி கொலு

கண்டு பாடுவோம்!

பரவசமாக தினம்

கொண்டாடுவோம்!


(கவிஞர் மல்லிகா செல்வராஜ், தித்திக்கும் சத்தான கடலை மிட்டாய்க்குப் பெயர் பெற்ற கோவில்பட்டியில் வசிக்கும் பல்கலை வித்தகர். மல்லிகை மலர் போன்று வெள்ளை மனமும், மென்மை குணமும் கொண்ட மங்கை இவர்!! இயற்கையை நேசித்து, எழுத்துக்களை வாசித்து, நேசத்தை சுவாசித்து வாழும் நங்கை இவர்! இனிய இல்லத்தரசி! கவிதைகள் புனைவது, திரையிசைப் பாடலின் மெட்டிற்கு ஏற்ற சந்தங்கள் அமைத்துச் சொந்த வரிகளில் இசைபடிக்கும் வல்லமை பெற்றவர்!)