42 நாடுகளுக்குப் போன பிரதமர் மோடி.. மணிப்பூருக்கு மட்டும் செல்லாதது ஏன்.. கார்கே கேள்வி
மைசூரு: பிரதமர் நரேந்திர மோடி 42 நாடுகளுக்கு மேல் போயுள்ளார். ஆனால் மணிப்பூருக்குப் போக மட்டும் அவர் மறுக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.
கர்நாடகா மாநிலம் மைசூருவில் நடந்த காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கார்கே கலந்து கொண்டு பேசினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியையும், பாஜகவையும் அவர் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
கார்கே பேசுகையில், பிரதமர் மோடி 42 நாடுகளுக்கு சென்றுள்ளார். ஆனால் மணிப்பூருக்கு செல்லவில்லை. மணிப்பூரில் ஒரு வருடத்திற்கும் மேலாக கலவரம் நடந்து வருகிறது. மத்திய அரசு இந்த விஷயத்தை சரியாக கையாளவில்லை.
இந்திய மக்கள் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவை, அரசியல் சாசனத்தை மாற்ற அனுமதிக்க மாட்டார்கள். காங்கிரஸ் கட்சியில் மக்கள் வேலை செய்தார்கள். ஆனால் மோடியின் பாஜக ஆட்சியில் மக்கள் பேசுகிறார்கள்.
கர்நாடக அரசு நிதி நெருக்கடியில் இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடக அரசு திவாலாகவில்லை. கர்நாடக அரசு நல்ல நிலையில் உள்ளது என்றார் கார்கே.