மனமாற்றம்!

Su.tha Arivalagan
Feb 04, 2026,12:07 PM IST

- ஆனந்தி. ச


டீச்சர் வகுப்பறையைவிட்டு போனபின்னும் யாழினியின் நினைவுகள் வகுப்பறையின் வலது கூரைப்பகுதியிலேயே குத்திட்டு நின்றவண்ணமாய் நிலைத்திருந்த்தது.


யாழு… தீபா உரக்கக்கூப்பிட்டத்து கூட காதில் விழாமல் யோசித்துக்கொண்டிருந்தாள்.


ஏய் யாழு .. என்ன பலத்த யோசனை? வரப்போற பரீட்ச்சையை  பத்தியா யோசிக்கற? என்றவாறே யாழினியின் தோளை உலுக்கினாள்.




தோளை உலுக்கியவுடனே திடுக்கிட்டவளாய் தீபாவின் பக்கம் திரும்பினாள்


“ என்னடி யாழு பகல் கனவா? பலிக்காதடி“


“சே! சே ! கனவெல்லாம் ஒன்னுமில்ல “என்று உச்சுக்கொட்டினாள் யாழினி.


"பின்ன என்னடி பலத்த யோசனை பரீட்சை பத்தியா?"


“ம்ஹூம் … அதெல்லாம் ஒன்னுமில்லடி “,என்றவளை


" அதானே பார்த்தேன் .. நீ அவ்வளவு நல்லவளான்னு? அவளை சீண்டினாள் தீபா.


"எங்க வீட்ல எப்போதும் பிரச்சனை டீ உனக்குதான் தெரியுமே எங்கப்பா மொடா குடிகாரர்.. குடிச்சிட்டு வந்து என்னையும் எங்கம்மாவையுமே அடிப்பாருன்னு.


.. அதுதான் பழைய கதையாயிற்றே ..அதுக்கெல்லாம் நீ கலங்குற ஆளுமில்லையேடி ? இப்போ என்ன பிரச்சினை? 

“ நேத்து குடிச்சிட்டு பலமா எங்கம்மாவை பக்கத்துல இருந்த கம்பியாலேயே அடிச்சு கால் பலமா வீங்கிடுச்சி..  அம்மாவும் நைட்டு பூரா அழுது அழுது மூஞ்சி வீங்கி .. பார்க்கவே ரொம்ப கஷ்டமாய் இருக்குடி .இதுல என்னால சுத்தமாய் படிப்பில கவனம் செலுத்தவே முடியலடி .. புத்தகத்தை தொறந்தா அவரோட கோர முகம்தான் கண்ணுக்கு தெரியிது ..  ஸ்கூல்லேர்ந்து வீட்டுக்கு போகவே பிடிக்கல .   எதாவது காரணத்த சொல்லி என்னையும் எங்கம்மாவையும் திட்டிக்கிட்டே இருக்காருடி . அவர ஒரு வழி பண்ணணும்டி” யாழினி தீர்மான குரலில்  சொன்னாள், 


பள்ளியின் மணிச்சத்தம் கேட்டு வீடு செல்ல ஆயுத்தமானர்கள் இருவரும்.  புத்தகப்பையை எடுத்தவள் மெல்ல மெல்ல அடியெடுத்தவள் மனதுக்குள் பல எண்ணவோட்டங்கள் .. 


“எப்படியும் இத சரி பண்ணிடனும்”


என்ன பண்ணலாம்? ஏதாவது பண்ணனும். பண்ணியே ஆகனும்! 


ஏதோ எண்ணத்தை தீர்மானித்தவள் போல் விருட்டென நடைந்தாள். வீட்டை அடையும் போது மணி ஆறு. அம்மா ! என அழைத்தபடியே உள்ளே சென்றாள்.  முதல்நாள் வாங்கிய அடியிலும் , அழுது  ஓய்ந்ததால் ஏற்பட்ட தளர்விலாலும்.. கூப்பிட்ட குரலுக்கும் கூட பதிலளிக்க முடியாமல் முனகியபடியே..


என்ன கண்ணு ? ஸ்கூல்லேர்ந்து வந்துட்டிய்யா? கை கால் கழுவிட்டு கொஞ்சம் சாப்பிடுமா.. என்றாள் அவள் அம்மா..


“ நான் சாப்பிடுவது இருக்கட்டும் .. நீ என்னம்மா சாப்பிட்ட .. ? 


கொஞ்சம்போல் ரசம் சோறு கரைச்சு குடிச்சேன் .. நீ முதல்ல சாப்பிடு.  அந்தாளு வந்துட்டா .. அவனும் சாப்பிடமாட்டான் .. நம்மளையும் சாப்பிட விடமாட்டான் “.. 


அம்மா.. நான் ஒண்ணு சொல்றேன் கேட்குறியா? 


“ சொல்லுடா தங்கம் “ என்ன செய்யணும்.


இன்னைக்கு அந்த ஆள் வந்து ஒண்ண அடிச்சா நீ பட்டுன்னு பக்கத்துல என்ன கிடைக்குதோ எடுத்து பட்டுன்னு அடிச்சிடுமா..


“ஐயோ என்ன கண்ணு இப்படி சொல்ற “ அப்பா பாவம்டா தங்கம்..


“அடிவாங்கி கூட நீ திருந்தமாட்டம்மா..”


“அப்பா பாவம் நல்ல மனுஷன் . பாழாப்போன இந்த குடியாலதான் இப்படியாயிட்டாரு.”


பேசிக்கொண்டிருக்கும்பொழுதே இடையில் தெளிவாக உள்ளே வந்தான் குமரன் .. யாழு கண்ணு .. என்றவனை முறைத்தாள் யாழினி ..


என்னம்மா? ரொம்ப வலிக்குதா? என்றபடியே யாழினி அம்மாவிடம் சென்றான்.


சரியாயிடுச்சுங்க என்ற அம்மாவை எந்த கணக்கில் சேர்ப்பது எனத்தெரியாமல் விழித்த யாழினி “ ம்க்கும் நைட்டு நங்கு நங்குன்னு அடிக்கவேண்டியது.. வெளிய போகவேண்டியது..அப்புறம் என்ன வலிக்குதான்னு ?” அம்மாவுக்கு பதில் வாய் பேசினாள் யாழினி. உடம்பு வலிக்கூட பரவாயில்ல மனசு வலியிருக்கே ! அடடா சொல்லமுடியல .


“முதல்ல அந்தாள வெளியப்போகச்சொல்லும்மா அப்புறமா என் வாயில ஏதாவது வந்திடப்போகுது..”  அப்பான்னு தப்பி தவறு தன்வாயில் வரக்கூடாது என்பதில் மிக கவனமாய் இருந்தாள் யாழினி.


எங்க ஸ்கூல்ல படிக்கிற என் பிரண்ட்ஸ் அப்பால்லாம் எவ்வளவு அக்கறையா குடும்பா பொறுப்பா இருக்காங்க .? 

அம்மா இந்தாளை நம்பி எப்படிம்மா உன் வீட்டை விட்டு ஓடி வந்த ? 


தன் மகள் தன் கணவை பேசுவதை பொருக்காத யாழினியின் அம்மாவோ .. போதும் நிறுத்துறியா ? என ஆரம்பிக்க ..

“ இப்படி சொல்லிதான் என் வாய அடைச்சிடற. இன்னைக்கு நான் இத சும்மா விடப்போறது கிடையாது .. ஒரு முடிவு பண்ணத்தான் போறேன்.


“ யாழுப்பாப்பா . நான் என்னடாமா செய்யறது .. இன்னையோட கடைசின்னு நினைக்கிறேன் ஆனா ..கடையப்பார்த்தா என் மனசு மாறிடுது .. குடித்தவுடன் என் மனசும் மாறிடுது என சன்னமான குரலில் கூறினார் யாழினியின் அப்பா!


மனசு என்பதை மனுசனால அடக்க முடியலேன்னா அவன் சராசரி மனுஷனே இல்ல .. அவன் சொன்னான் குடிச்சேன் .. இவனுக்காக குடிச்சேன்னு ஆரம்பிச்சு இன்னைக்கு கடையப்பார்த்தாலே குடிக்க தோணுதுங்கற நினைப்பு வந்திருக்கு .. 


“குடிக்காக என்னவேணாலும் செய்யலாங்கற நினைப்புல தானே அம்மாவையும் என்னையும் கேள்வி கேட்டா அடிக்கிற .. இன்னைக்கு முடிவு பண்ணு நாங்க வேணுமா? இல்ல அந்த பாழாப்போன குடியான்னு ? “


நீ இல்லன்னா எங்களால வாழ முடியாதுன்னு நினைச்சியா ? கண்டிப்பா முடியும் ! நான் பார்ட் டைம் வேலைப்பார்த்து படிச்சிக்கிட்டே கூட எங்கம்மாவ நான் காப்பாத்துவேன் .


தன் மகளுக்கு இவ்வாறெல்லாம் பேசத்தெரியுமா? என்பதுபோல் அவள் பேசுவதை வாயடைத்து போய் நின்றிருந்தனர் அவளது பெற்றோர்.


அம்மா உனக்குதான்  சொல்றேன் ,”இவர் இப்படி ஆனதுக்கு மூலக்காரணமே நீ தான் ! அவர் செய்வது தப்புன்னு தெரிஞ்சே துணை போயிருக்க! அந்தாளு உன்னை அடிச்ச நிமிஷமே ,மறுபடி நீ அடிச்சிருந்தா !யோசிச்சிருப்பாரு, இவ்வளவு தூரத்துக்கு போயேயிருக்காது . இனிமேல்லாம் நான் சும்மா இருக்கமாட்டேன் போலீஸ் ஸ்டேசன்ல கம்பிளைண்ட் பண்ணிடுவேன்.  என்ன கம்பிளைண்டுன்னு கேட்டியா?  என் சொந்த அப்பா குடிச்சிட்டு என் கிட்ட தகாதமுறையில நடந்துக்க பார்க்கிறாருன்னு “”


சொல்லியவள் அப்பாவையோ அம்மாவையோ திரும்பிப்பார்க்காமல் பக்கத்தில் உள்ள தன் பிரண்டு தீபா வீட்டிற்கு சென்றுவிட்டாள்.


மனமாற்றம் ஏற்படுமா? பொறுத்திருந்து பார்க்கப்போவது யாழினி மட்டுமல்ல அனைவரின் மனமும்தான்.


(ஆனந்தி ச, பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, கண்டிகை, செங்கல்பட்டு மாவட்டம்)