முதல் தோட்டா.....!
- கவிஞர் க.முருகேஸ்வரி
நம் தாய்த்திருநாடு ஆங்கிலேயருக்கு அடிமையாக இருந்த காலத்தில் வெள்ளையர்களை எதிர்த்து நடந்த முதல் கிளர்ச்சி எது தெரியுமா????
இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதல் முழக்கம் ஆரம்பமானது மார்ச் 29 அன்று.அதுவும் ஒரு ஞாயிற்றுக்கிழமை....
1857 இல் கொல்கத்தாவில் பராக்பூரில் ஒரு சிங்கம் கர்ஜித்துக் கொண்டிருந்து. எனக்கு முன்னால் முதலில் வரும் வெள்ளையனுக்கு முதல் குண்டு....சுட்டு வீழ்த்தப் போகிறேன் என்று.... 34 ஆவது வங்காள பூர்வீக காலாட்படை
சிப்பாய் எண்1446
சிப்பாய் பெயர்-மங்கள் பாண்டே
சிப்பாய் கலகத்தின் நாயகன் மக்கள் பாண்டே
அங்கு கூடியிருந்த 400 வீரர்களையும் தனது புரட்சிகரமான வார்த்தைகளால் கிளர்ச்சியடையச் செய்து கொண்டிருந்தார் மங்கள் பாண்டே
அங்கு வந்த ஜெனரல் போ வை நோக்கி தன் முதல் குண்டை செலுத்தினார். அது தவறி குதிரையின் காலில் படவே....போ சரிந்து விழுகிறான்
பாண்டேவை கைது செய்யுங்கள் என்ற உத்தரவுக்கு ஒரு சிப்பாய் கூட செவிசாய்க்கவில்லை....ஒரே ஒரு துரோகியைத் தவிர ஷேக் பால்டு பின்னால் இருந்து பிடிக்க துரோகத்தால் பிடிபட்டார் பாண்டே.... பின்னர் தூக்கிலிடப்பட்டார்
இதுவே முதல் சிப்பாய்க் கலகம்.
சிப்பாய் கலகத்திற்குக் காரணமாக சொல்லப்படுவது...
சிப்பாய்களுக்கு வழங்கப்பட்ட புது வகை துப்பாக்கி.
அந்தத் துப்பாக்கியின் தோட்டா உறையை வாயில் கடித்து அவிழ்க்க வேண்டும்..அந்த உறை பன்றி மட்டும் மாட்டுக் கொழுப்பினால் செய்யப்பட்டதாக வதந்தி பரவியது.இது இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதால் இந்தக் கிளர்ச்சி உருவானது.
மங்கள் பாண்டே
தியாகி மங்கள் பாண்டே என அனைவராலும் அறியப்பட்டார்.
இன்றளவும் விடுதலைப் போராட்டத்தின் முன்னோடி வீரராக மங்கள் பாண்டே போற்றப்படுகிறார்.
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).