ஆஹா சூப்பர் ருசி -- மரவள்ளி கிழங்கு சுழியம்!

Su.tha Arivalagan
Dec 24, 2025,04:24 PM IST

- சுமதி சிவக்குமார்


சின்ன சேலம்: சுழியம் ஒரு சூப்பரான இனிப்புங்க.. அதிலும் மரவள்ளிக்கிழங்கில் செய்யும் சுழியம் சாப்பிட்டிருக்கீங்களா.. அது வேற லெவல் சூப்பர் ருசியான பதார்த்தம்.. வாங்க ஒரு கை பார்ப்போம்.. அதுக்கு முன்னாடி கிச்சனுக்குள் போகலாம்.


தேவையான பொருட்கள்:


மரவள்ளி கிழங்கு 1/2 கி தோல் நீக்கி துருவியது

ஏலக்காய் சிறிதளவு பொடி

நாட்டுச் சர்க்கரை 1 கப் 

நெய் தேவையான அளவு 

உப்பு தேவையான அளவு

கான் பிளவர் மாவு 1 கப் 


செய்முறை:




மரவள்ளி கிழங்கு துருவலை சிறிது உப்பு கலந்து இட்லி பானையில் 3 நிமிடங்கள் வேக வைக்கவும். 


பிறகு லேசாக ஆறியவுடன் வேறொரு கிண்ணத்தில் மாற்றி ஏலக்காய் பொடி நாட்டுச் சர்க்கரை சேர்த்து கலக்கவும். லட்டு போல் உருண்டைகளாக பிடிக்கவும். 


வேறொரு பாத்திரத்தில் ஒரு கப் கான் பிளவர் மாவு மற்றும் இட்லி மாவு ஒரு கரண்டி அளவு சேர்த்து நீர் விடாமல் கலக்கவும். 


பின் பிடித்த வைத்த உருண்டைகளை மாவில் தோய்த்து பனியாரம் ஊற்றும் சட்டியில் நெய் விட்டு இருபுறமும் சிவக்க எடுக்கவும். 


வாணலியில் எண்ணெய்யில் போட்டும் பொரிக்கலாம். 


இனிப்பான மரவள்ளி கிழங்கு சுழியம் ரெடி. கிழங்கு சாப்பிடாத குழந்தைகள் கூட இதை அப்படியே சப்புக் கொட்டிச் சுவைத்துச் சாப்பிடும்.


புகைப்படம் உதவி: https://www.youtube.com/watch?v=92S9F3JFEC8


(சுமதி சிவக்குமார், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)