விழுந்தாலும் எழும் துணிச்சலான பெண்ணின் வாழ்க்கைப் பயணம்!
Dec 30, 2025,05:04 PM IST
- அ.சீ.லாவண்யா
பெண்ணே... இந்த உலகம் சில நேரங்களில் உன்னை அழ வைக்கும். நம்பிக்கையோடு தொடங்கிய பயணத்தில் திடீரென தடைகள் வரும். உன் கனவுகளை கேலி செய்யும் வார்த்தைகள், உன் திறமைகளை குறைக்கும் பார்வைகள்-இவை எல்லாம் உன் மனதை சோர்வடையச் செய்யும். அந்தக் கணங்களில் வாழ்க்கையே சுமையாகத் தோன்றும்.
தளராதே எழு மீண்டும் செல் உயழைக்கவும் சாதிகவும் மனதில் உறுதியும் நம்பிக்கையும் இருந்தால் எதையும்
சாத்திக்கலாம்.
சில நேரங்களில் நீ விழ வைக்கப்படுவாய். உன் தவறால் அல்ல; உன் துணிச்சலைப் பொறுக்க முடியாதவர்களின் செயலால். அப்போது "இது எனக்கு தேவையா?" என்று உன் வாழ்க்கையை வெறுக்கத் தோன்றும். ஆனால் நினைவில் கொள்-விழுதல் தோல்வி அல்ல; விழுந்தபின் எழாமல் இருப்பதே தோல்வி.
பயம் நிறுத்த முயலும். "நீ முடியாது" என்று உன் மனதுக்குள் ஓர் குரல் ஒலிக்கும். உன் மனதில் எழும் ஒளியை மீது உன் நம்பிக்கையை மிக பெரிய அளவில் வை பெண்ணே நமது வெற்றி நாம் நம்மீது வைக்கும் நம்பிக்கை தான். பெண் உன் சக்தி உன் நம்பிக்கை கொண்டு வாழ்க்கை பயணத்தை மகிழ்ச்சியுடன் வாழ்.
ஆயிரம் கைகள் உன்னை சாதிக்க விடாமல் பூட்டு போட நினைக்கும் மத்தியில் உன் இரும்பு மனதோடு போராடு உன் வெற்றிக்காக. சோர்வு வரும் நாள்களில், உன் உள்ளே ஒளிந்திருக்கும் வலிமையை நினை. நீ பிறந்தது சுமையாக அல்ல; சாதிக்கத்தான். உன் கண்ணீரே உன் பாடமாகட்டும்; உன் வலி உன் பயிற்சியாகட்டும்.
காலம் உன்னை உடைக்க அல்ல-உருவாக்கத்தான். துணிச்சளுடன் போராடு வாழ் ஆனால் உன் பிறர் சொல்வதற்காக அல்ல, உன் கனவுகளுக்காக. உன் முடிவுகளை நீயே எடு; உன் பாதையை நீயே வரைய. சிறு முன்னேற்றங்களே பெரிய மாற்றங்களுக்கு விதையாகும்.
உன் வாழ்க்கயை நீயே உன் முடிவுகளை தானாக எடு பயம் கொள்ளாதே வீரச்சியாகவும் சிங்கப்பெண்ணாகவும் வாழ். இறுதியில் நினைவில் கொள், பெண்ணே-இந்த உலகம் உன்னை சோதிக்கலாம்; ஆனால் உன்னை வரையறுக்க முடியாது.
விழுந்தாலும் எழும் உன் துணிச்சலே உன் அடையாளம். உன் பயணம் உன்னால் தொடங்கி, உன் வெற்றியால் முடிவடைய வேண்டும். மனதில் தைரியம் கொள் பெண்ணே.
போராடு பெண்ணே உன் வெற்றியை அடையும் வரை போராடு.
(அ.சீ.லாவண்யா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)