திருமண உதவித் திட்டம்: 5,460 தங்க நாணயங்கள் கொள்முதலுக்கு டெண்டர் அறிவிப்பு

Meenakshi
Sep 11, 2025,06:36 PM IST

சென்னை: தமிழக அரசின் திருமண உதவி திட்டத்திற்காக 5,460 தங்க நாணயங்கள் கொள் முதல் செய்வதற்கான கொள் டெண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


தமிழக அரசு பெண்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ஏழை பெண்களின் திருமணத்திற்காக தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. தமிழக அரசு மூவலூர் ராமாமிர்தம் நினைவு திட்டத்தின் வாயிலாக தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டு வருகிறது.


தமிழ்நாட்டில் ஏழை, ஆதரவற்ற பெண்கள், மறுமணம் செய்யும் பெண்கள், கைம் பெண்கள் மற்றும் ஜாதி மறுப்புத் திருமணம் செய்யும் பெண்களுக்கு தமிழக அரசு நிதி உதவி திட்டத்தின் கீழ் நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக அரசு நலத்திட்டங்களுக்கு 8 கிராம் எடையிலான 22 கேரட் தங்கம் வழங்கப்பட்டு வருகிறது.




இதற்காக மொத்தம் 5640 தங்க நாணயங்கள் ரூபாய் 45 கோடி மதிப்பில் வாங்கப்பட உள்ளது. இதற்கான டெண்டர் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தங்க நாணயங்கள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் இந்த டெண்டருக்கு  இன்று முதல் அக்டோபர் 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.