கல்யாணம் என்பது கட்டாயம் அல்ல; அது ஒரு சாய்ஸ் தான் - மனம் திறந்த நடிகர் சிம்பு!

Su.tha Arivalagan
Feb 09, 2026,01:47 PM IST

சென்னை: கல்யாணம் என்பது கட்டாயம் அல்ல, அது ஒரு சாய்ஸ் தான்  என்று  நடிகர் சிம்பு பரபரப்பான பதில் ஒன்றை தெரிவித்துள்ளார்.


தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சிம்பு, தனது திருமணம் குறித்த ரசிகர்களின் நீண்டகால கேள்விக்கு மிகவும் வெளிப்படையான பதிலை தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களாகவே சிம்புவின் திருமணம் எப்போது? என்ற கேள்வி திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பேசுபொருளாகவே இருந்து வருகிறது. இது குறித்து சிம்பு பேசுகையில்,  மொபைல் போன்கள் மனித உணர்ச்சிகளை மாற்றிவிட்டன.  காதலும் பிரிவும் இப்போது வேகமாக நடக்கிறது. ஆனால், ஆழமான உறவுகள் இப்போதும் இருக்கத்தான் செய்கிறது.




சமூகம் சொல்கிறது என்பதற்காகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட வயதை எட்டிவிட்டோம் என்பதற்காகவோ திருமணம் செய்து கொள்ளக் கூடாது. அது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் (Personal Choice) என்றும், வாழ்க்கையில் திருமணம் செய்தே ஆக வேண்டும் என்பது ஒரு விதி அல்ல. ஒரு துணை வேண்டுமென்று தோன்றும் போது, சரியான நபர் கிடைக்கும் போது அது தானாக நடக்கும். அதைத் தேடி ஓடுவதிலோ அல்லது கட்டாயப்படுத்துவதிலோ எனக்கு உடன்பாடில்லை என்றும், 


தற்போது தான் மிகவும் நிம்மதியாக இருப்பதாகவும், தனது கலைப்பயணத்திலும் ஆன்மீக தேடலிலும் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். சிம்புவின் இந்த கருத்துக்கு இணையதளங்களில் கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.